நீயும் நானும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏக்நாத்பென்னி டயல் & ஸ்ரேயா கோஷல்டி. இமான்மைனா

Neeyum Naanum Song Lyrics in Tamil


ஆண் : நீயும் நானும் வானும் மண்ணும்…
நினைச்சது நடக்கும் புள்ள…
வீசும் காத்தும் கூவும் குயிலும்…
நினைச்சது கிடைக்கும் புள்ள…

பெண் : நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன்…
கிடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்…

ஆண் : ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல…
ஏழாயிரம் கதவுகள் நமக்கென தொறக்கும் புள்ள…
பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல…

பெண் : நீயும் நானும்…
ஆண் : வானும் மண்ணும்…
பெண் : நினைச்சது நடக்கும் அய்யா…

ஆண் : வீசும் காத்தும்…
பெண் : கூவும் குயிலும்…
ஆண் : நினைச்சது கிடைக்கும் புள்ள…

BGM

ஆண் : நாம நினைச்சது நடந்துச்சு நல்லபடி…
அந்த சாமிக்கு என்ன சொல்லுவ…

பெண் : நாம கேட்டதும் கிடைச்சிட்ட வாழ்க்கையத்தான்…
பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்…

ஆண் : ஹே… ஆச கொஞ்சம் வேணும்…
அது ஆயுள் நாளக்கூட்டும்…
அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல…
அத நினைச்சாலே போதும் புள்ள…

பெண் : ஓஓ… நீயும் நானும்…
ஆண் : வானும் மண்ணும்…
நினைச்சது நடக்கும் புள்ள…
பெண் : ஓஓ… நீயும் நானும்…

BGM

ஆண் : தெருக்கோடியில் கிடந்த வாழ்க்கையுந்தான்…
இப்போ கோடியில் புரளுதடா…

பெண் : இந்த பூமியைக்கூட கையில் சுத்தும்…
அந்த ரகசியம் தெரிஞ்சுதடா…

ஆண் : ஹே ஹே ஹேய்… காதல் தானே மாற்றம்…
நம்மை உயரத் தூக்கி மாட்டும்…
அட சொன்னா கேளு வாழ்க்கை சுத்தும்…
பூவு ஒன்னா கொண்டாடி போகும் புள்ள…

பெண் : நீயும் நானும் வானும் மண்ணும்…
நினைச்சது நடந்திருச்சு…

ஆண் : வீசும் காத்தும் கூவும் குயிலும்…
நினைச்சது கிடைச்சிருச்சு…

ஆண் : ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல…
ஏழாயிரம் கதவுகள் தொறக்குமே தடையும் இல்ல…

பெண் : ஓ… பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல…

பெண் : நீயும் நானும் வானும் மண்ணும்…
நினைச்சது நடக்கும் அய்யா…


Notes : Neeyum Naanum Song Lyrics in Tamil. This Song from Mynaa (2010). Song Lyrics penned by Eknaath. நீயும் நானும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading