முத்தாடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாநல்லவனுக்கு நல்லவன்

Muthaduthey Song Lyrics in Tamil


BGM

ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்…
பித்தானதே பித்தானதே தேகம்…
பூவாய் நீயும் பார்வை வீசு…
அன்பே நீயும் கண்ணால் பேசு…

பெண் : கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்…
பித்தானதே பித்தானதே தேகம்…
பூவாய் நீயும் பார்வை வீசு…
அன்பே நீயும் கண்ணால் பேசு…

ஆண் : கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பாவை உன் மேனி காதல் வீணை…
காளை என் கைகள் மீட்டும் வேளை…

பெண் : என்னென்ன ராகங்கள் நீ மீட்டுவாய்…
அதில் என்னென்ன வண்ணங்கள் நீ காட்டுவாய்…

ஆண் : ஏதேதோ ராகங்கள் நான் பாடலாம்…
அது தாங்காமல் உன் மேனி போராடலாம்…

பெண் : சந்தோஷம் தாங்காமல் தள்ளாடும் நேரத்தில்…
என் மேனி சாயாமல் நீ தாங்கலாம் அன்பே…
லால்ல லா லா லா…

ஆண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்…
பெண் : பித்தானதே பித்தானதே தேகம்…

BGM

பெண் : தேகம் தண்ணீரில் நீந்தும் போது…
நெஞ்சில் ஏதேதோ இன்பம் நூறு…

ஆண் : மீன் போல நான் மாறி விளையாடவா…
அலை நீர் போல உன்மீது நான் மோதவா…

பெண் : என் மேனி நோகாமல் விளையாடலாம்…
இந்த இடையோடு தாளங்கள் நீ போடலாம்…

ஆண் : தாளங்கள் நான் போட…
நாணங்கள் பறந்தோட…
தேகங்கள் இளைப்பாற இடம் தேடலாம் அமுதே…
ராப்ப ரா பா பா…

பெண் : முத்தாடுதே முத்தாடுதே ராகம்…
பித்தானதே பித்தானதே தேகம்…

ஆண் : பூவாய் நீயும் பார்வை வீசு…
அன்பே நீயும் கண்ணால் பேசு…

ஆண் & பெண் : கனியிதழ் முத்தாடுதே முத்தாடுதே ராகம்…


Notes : Muthaduthey Song Lyrics in Tamil. This Song from Nallavanukku Nallavan (1984). Song Lyrics penned by Muthulingam. முத்தாடுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading