சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாநல்லவனுக்கு நல்லவன்

Chittuku Chella Chittuku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு…
ஒரு சிறகு முளைத்தது…
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்…
அந்த உறவு முறிந்தது…

ஆண் : தந்தையும் இல்லை அன்னையும் இல்லை…
கனவா வெறும் நினைவா…
நெஞ்சிலே வரும் பந்தமே…
தொடர்கதையா சிறுகதையா…

ஆண் : சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு…
ஒரு சிறகு முளைத்தது…
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்…
அந்த உறவு முறிந்தது…

—BGM—

ஆண் : நாம் போடும் மேடைகளோ நாடக மேடை…
நாம் போகும் ஓடங்களோ காகித ஓடம்…

ஆண் : பாசம் என்பதா வேஷம் என்பதா…
காலம் செய்த கோலம்…
பாசம் என்பதா வேஷம் என்பதா…
காலம் செய்த கோலம்…

ஆண் : கூடி வாழ கூடுதேடி ஓடி வந்த ஜீவன்…
ஆடிப்பாட காடு தேடும் யார் செய்த பாவம்…
தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே…

ஆண் : சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு…
ஒரு சிறகு முளைத்தது…
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்…
அந்த உறவு முறிந்தது…

ஆண் : தந்தையும் இல்லை அன்னையும் இல்லை…
கனவா வெறும் நினைவா…
நெஞ்சிலே வரும் பந்தமே…
தொடர்கதையா சிறுகதையா…

ஆண் : சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு…
ஒரு சிறகு முளைத்தது…

—BGM—

ஆண் : காலங்கள் மாறி வரும் காட்சிகள் இங்கே…
நியாயங்கள் ஆறுதலை கூறுவது எங்கே…

ஆண் : மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்…
சூடும் கன்னிப் பாவை…
மஞ்சள் குங்குமம் மார்பில் சந்தனம்…
சூடும் கன்னிப் பாவை…

ஆண் : பாச தீபம் கையில் ஏந்தி…
வாழ வந்த வேளை…
கண்களாட பெண்மை பாட…
இன்பம் கண்ட மங்கை…
நாம் வாடி நின்றாலும் நலமோடு வாழ்கவே…

ஆண் : சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு…
ஒரு சிறகு முளைத்தது…
ரத்தத்தில் வந்த சொந்தங்கள்…
அந்த உறவு முறிந்தது…

ஆண் : தந்தையும் இல்லை அன்னையும் இல்லை…
கனவா வெறும் நினைவா…
நெஞ்சிலே வரும் பந்தமே…
தொடர்கதையா சிறுகதையா…

ஆண் : சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு…
ஒரு சிறகு முளைத்தது…


Notes : Chittuku Chella Chittuku Song Lyrics in Tamil. This Song from Nallavanukku Nallavan (1984). Song Lyrics penned by Na. Kamarasan. சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading