| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | கே.ஜே. யேசுதாஸ் & மஞ்சுளா குருராஜ் | இளையராஜா | நல்லவனுக்கு நல்லவன் |
Unnaithane Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உன்னைத்தானே தஞ்சம் என்று…
நம்பி வந்தேன் நானே…
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்…
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்…
பெண் : உன்னைத்தானே தஞ்சம் என்று…
நம்பி வந்தேன் நானே…
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இட்டேன்…
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இட்டேன்…
பெண் : உன்னைத்தானே…
—BGM—
பெண் : மலரின் கதவொன்று திறக்கின்றதா…
மௌனம் வெளியேற தவிக்கின்றதா…
பெண்மை புதிதாக துடிக்கின்றதா…
உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா…
பெண் : முத்தம் கொடுத்தானே…
இதழ் முத்துக்குளித்தானே…
இரவுகள் இதமானதா…
கட்டி பிடித்தால் தொட்டு எடுத்தால்…
வெட்கம் என்ன சத்தம் போடுதா…
ஆண் : என்னைத்தானே தஞ்சம் என்று…
நம்பி வந்தாய் மானே…
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இடு…
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு…
ஆண் : என்னைத்தானே…
—BGM—
ஆண் : உலகம் எனக்கென்றும் விளங்காதது…
உறவே எனக்கின்று விலங்கானது…
அடடா முந்தானை சிறையானது…
இதுவே என் வாழ்வில் முறையானது…
ஆண் : பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே…
உறவுக்கு உயிர் தந்தாயே…
நானே எனக்கு நண்பன் இல்லையே…
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே…
ஆண் : என்னைத்தானே தஞ்சம் என்று…
நம்பி வந்தாய் மானே…
உயிர் பூவெடுத்து ஒரு மாலை இடு…
விழி நீர் தெளித்து ஒரு கோலம் இடு…
ஆண் : என்னைத்தானே தஞ்சம் என்று…
நம்பி வந்தாய் மானே…
Notes : Unnaithane Song Lyrics in Tamil. This Song from Nallavanukku Nallavan (1984). Song Lyrics penned by Vairamuthu. உன்னைத்தானே தஞ்சம் என்று பாடல் வரிகள்.
