முன் செல்லடா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிசந்தர் & ஏ.டி.கேசந்தோஷ் நாராயணன்மனிதன்

Mun Sellada Song Lyrics in Tamil


குழு : முன் செல்லடா…
முன்னே செல்லடா…
தைாியமே துணை…
தோல்விகளும் காயங்களும்…
செதுக்கிடுமே உனை… ஓகே…

—BGM—

ஆண் : உளி முத்தம் வைத்ததும் சிதறும்…
அப்பாறை துளிகள்…
அதற்காக கண்ணீா் சிந்தாது…
சிற்பத்தின் விழிகள்…

ஆண் : கருமேகம் முட்டிக் கொட்டும்…
அத்தண்ணீா் பொறிகள்…
அவை விழுந்தால் பற்றிக்கொள்ளட்டும்…
உன் நெஞ்சின் திாிகள்…

குழு : முன் செல்லடா…
முன்னே செல்லடா…
தைாியமே துணை…
தோல்விகளும் காயங்களும்…
செதுக்கிடுமே உனை…

ஆண் : ஆயிரம் தடைகளை உன் முன்னே…
காலம் இன்று குவித்தாலும்…
ஆயிரம் பொய்களை ஒன்றாய் சோ்ந்து…
உன்னை பின்னால் இழுத்தாலும்…

ஆண் : முன் செல்லடா…
ஓகே… முன் செல்லடா…
முன் செல்லடா… யே…
முன் செல்லடா…

குழு : முன் செல்லடா…
முன்னே செல்லடா…
தைாியமே துணை…
தோல்விகளும் காயங்களும்…
செதுக்கிடுமே உனை…

—BGM—

குழு : ஓஹோ… செல்லடா…
முன் செல்லடா முன் செல்லடா…

ஆண் : தூரம் நின்று யோசித்தால்…
குட்டை கூட ஆழம்தான்…
நீ உள்ளே சென்று நேசித்தால்…
அக்கடலும் உந்தன் தோழன்தான்…

ஆண் : விதிமேல் பழியைப் போடாமல்…
நீ உன்மேல் பழியைப் போடு…
ஆண்டவன் கொஞ்சம் தூங்கட்டும்…
உன் வாழ்க்கையின் காரணம் தேடு…

—BGM—

ஆண் : முன் செல்லடா…
முன் செல்லடா…

குழு : முன் செல்லடா…
முன்னே செல்லடா…
தைாியமே துணை…
தோல்விகளும் காயங்களும்…
செதுக்கிடுமே உனை…

ஆண் : முன் செல்லடா… ஓஹோ…

குழு : முன் செல்லடா…
முன்னே செல்லடா…
தைாியமே துணை…
தோல்விகளும் காயங்களும்…
செதுக்கிடுமே உனை…


Notes : Mun Sellada Song Lyrics in Tamil. This Song from Manithan (2016). Song Lyrics penned by Madhan Karky. முன் செல்லடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading