மௌனமான நேரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாசலங்கை ஒலி

Mounamaana Neram Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மௌனமான நேரம்…

பெண் : மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…
மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்…
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்…
ஏன் என்று கேளுங்கள்…

பெண் : இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…

—BGM—

ஆண் : இளமை சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ…

—BGM—

ஆண் : புலம்பும் அலையை கடல் மூடி கொள்ளுமோ…

பெண் : குளிக்கும் ஓர் கிளி…
கொதிக்கும் நீர்த் துளி…
குளிக்கும் ஓர் கிளி…
கொதிக்கும் நீர்த் துளி…

ஆண் : ஊடலான மார்கழி நீளமான ராத்திரி…
பெண் : நீ வந்து ஆதரி…

பெண் : மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…

—BGM—

பெண் : இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ…

—BGM—

பெண் : கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ…

ஆண் : பாதை தேடியே பாதம் போகுமோ…
பாதை தேடியே பாதம் போகுமோ…

பெண் : ஆடலான நேசமோ…
கனவு கண்டு கூசுமோ…

ஆண் : தனிமையோடு பேசுமோ…

ஆண் : மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…
இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்…
மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்…
ஏன் என்று கேளுங்கள்…

பெண் : இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்…


Notes : Mounamaana Neram Song Lyrics in Tamil. This Song from Salangai Oli (1983). Song Lyrics penned by Vairamuthu. மௌனமான நேரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading