மின்னல் பூக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிகார்த்திக்இளையராஜாநினைவெல்லாம் நீயடா

Minnal Pookkum Undhan Kangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…
எனக்கு சொல்வதென்ன…
சாரல் காற்றில் சாயும் பூக்கள்…
என்னை கேட்பதென்ன…

ஆண் : இமையின் நிழலே எனக்கு போதும்…
இதயம் அதிலே துடிக்கும் நாளும்…
உனது நினைவோடு வாழும் வாழும்…

ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…
எனக்கு சொல்வதென்ன…

BGM

ஆண் : உன்னை கண்ட கனவு கலையவில்லை…
உறங்கும் பொழுதும் உனது நினைவில்…
இதயம் தவிக்கிறதே…

ஆண் : என்ன இந்த மயக்கம் புரியவில்லை…
எனக்கும் உனக்கும் இடையில் இருக்கும்…
நெருக்கம் பிடிக்கிறது…

ஆண் : தயங்கி நின்றேன் இரவை போல…
இறங்கி வந்தாய் நிலவை போல…
அள்ளவும் கிள்ளவும் ஆசை தூண்டுதே…
என் மனம் உன்னிடம் வானம் தாண்டுதே…

ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…
எனக்கு சொல்வதென்ன…

BGM

ஆண் : தொட்டு தொட்டு கொஞ்ச மழை வந்ததே…
நனையும் உடம்பில் வழியும் துளிகள்…
உயிரைத் தொடுகின்றதே…

ஆண் : மழை வந்து நனைத்த மரங்களை போல்…
என்னது மனமும் எனது வயதும்…
சுமையில் தவிக்கின்றதே…

ஆண் : நனைந்த பறவை என்னைப் பார்க்கும்…
உன்னை தானே தஞ்சம் கேட்கும்…

ஆண் : தித்திக்கும் தித்திக்கும் உந்தன் பாடலை…
கொஞ்சட்டும் கொஞ்சட்டும் காதல் தேவதை…

ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…
எனக்கு சொல்வதென்ன…

ஆண் : இமையின் நிழலே எனக்கு போதும்…
இதயம் அதிலே துடிக்கும் நாளும்…
உனது நினைவோடு வாழும் வாழும்…

ஆண் : மின்னல் பூக்கும் உந்தன் கண்கள்…
எனக்கு சொல்வதென்ன…


Notes : Minnal Pookkum Undhan Kangal Song Lyrics in Tamil. This Song from Ninaivellam Neeyada (2024). Song Lyrics penned by Pazhani Bharathi. மின்னல் பூக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading