மழை வர போகுதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக் & எம்சி ஜெஸ்ஹாரிஸ் ஜெயராஜ்என்னை அறிந்தால்

Mazhai Vara Pogudhae Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழை வர போகுதே…
துளிகளும் தூறுதே…
நனையாமல் என்ன செய்வேன்…

ஆண் : மலா்வனம் மூடுதே…
மதுரமும் ஊருதே…
தொலையாமல் எங்கே போவேன்… ஓஹோ…

ஆண் : புகை போல வென்பஞ்சாய்…
மிதக்கின்ற என் நெஞ்சை…
எதை செய்து மீட்பேன்…
எவா் சொல்லி கேட்பேன்…

ஆண் : கடல் போன்ற கண்ணாலே…
என்னை வாாி சென்றாலே…
இழந்தேனே இன்று…
இருந்தாலும் நன்று…

ஆண் : அனல் மேலே கொஞ்சம்…
புனல் மேலே கொஞ்சம்…
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்…

ஆண் : மழை வர போகுதே…
துளிகளும் தூறுதே…
நனையாமல் என்ன செய்வேன்…

ஆண் : மலா்வனம் மூடுதே…
மதுரமும் ஊருதே…
தொலையாமல் எங்கே போவேன்…

BGM

ஆண் : கரு கரு கண்களால்…
கயல்விழி கொல்கிறாள்…
வலித்தாலும் ஏதோ சுகம்…
ஏதோ சுகம்…

ஆண் : குழி விழும் கன்னத்தில்…
குடி இரு என்கிறாள்…
விலையில்லா ஆயுள் வரம்… ஓஹோ…

ஆண் : நிலா தூங்கும் மேகத்தில்…
கனா காணும் நேரத்தில்…
அவள்தானே வந்தாள்…
அணைக்காமல் சென்றாள்…

ஆண் : ஓ இமை ரெண்டும் மூடாது…
உறக்கங்கள் வாராது…
அதை காதல் என்றால்…
அவள்தானே தந்தாள்…

ஆண் : மறந்தாலும் உன்னை…
கடந்தாலும் பின்னே…
மனம் எங்கும் அவள் ஞாபகம்…

BGM

ஆண் : கண்ணை கட்டி விட்டால் கூட…
பட்டாம்பூச்சி பூவை தேடும்…
மழை என்றால் மண்ணைதானே வந்து சேரும்…

BGM

ஆண் : கண்ணை கட்டி விட்டால் கூட…
பட்டாம்பூச்சி பூவை தேடும்…
மழை என்றால் மண்ணைதானே வந்து சேரும்…

ஆண் : ஏய் எந்த பக்கம் நிற்கின்றாயோ…
அந்த பக்கம் கண்கள் போகும்…
முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆடும்…

ஆண் : சுழலும் மயில் நீ… ஓஹோ…
உன் தோகை என் தோளில்…
சுகமாய் புரளும்… ஓஹோ…
பாா்ப்பேன் என் வாழ்நாளில்…

BGM

ஆண் : மழை வர போகுதே…
துளிகளும் தூறுதே…
நனையாமல் என்ன செய்வேன்…

ஆண் : மலா்வனம் மூடுதே…
மதுரமும் ஊருதே…
தொலையாமல் எங்கே போவேன்… ஓஹோ…

ஆண் : புகை போல வென்பஞ்சாய்…
மிதக்கின்ற என் நெஞ்சை…
எதை செய்து மீட்பேன்…
எவா் சொல்லி கேட்பேன்…

ஆண் : கடல் போன்ற கண்ணாலே…
என்னை வாாி சென்றாலே…
இழந்தேனே இன்று…
இருந்தாலும் நன்று…

ஆண் : அனல் மேலே கொஞ்சம்…
புனல் மேலே கொஞ்சம்…
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்…

BGM


Notes : Mazhai Vara Pogudhae Song Lyrics in Tamil. This Song from Yennai Arindhaal (2015). Song Lyrics penned by Thamarai. மழை வர போகுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading