மயக்க ஊசி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்விஜய் பிரகாஷ் & மதுமிதாவிஜய் ஆண்டனியுவன் யுவதி

Mayakka Oosi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு…
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன…
மருகி மருகி தினம் உருகி உருகி…
உன்னை தாங்கி தாங்கி மோட்சம் போனேனே…

பெண் : நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே…
என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே…

ஆண் : மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு…
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன…

—BGM—

ஆண் : உலகில் உள்ள அழகை எல்லாம்…
உன்னில் கண்டேனே…
அணுமின் நிலையம் ஒன்றை…
உந்தன் கண்ணில் கண்டேனே…

குழு : ஓஓஹோ… எதுவும் புரியாமல் என்னை அறியாமல்…
உன்னில காதல் கொண்டேனே… ஓஓஹோ…

பெண் : சிலையை மீட்டும் உளியை போலே என்னை தொட்டாயே…
கலகம் செய்யும் விரலால் என்னை ஏதோ செய்தாயே…
உடையை கலையாமல் வழியை உணராமல்…
சுகமாக கொன்றாயே… ஓஓஹோ…

ஆண் : உன்னை கண்ட மறு நொடியே…
இருதயம் வலப்புறம் மாறிடுதே…

பெண் : உன் கை தீண்டும் ஒரு நொடியில்…
நரம்புகள் எனக்குள்ளே வெடிக்கின்றதே…

—BGM—

ஆண் : மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு…
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன…

—BGM—

பெண் : தனியே நாமும் காணும் நேரம்…
பூமி நிற்கட்டும்…
பிரியாவிடையே சொன்ன பின்னே…
மீண்டும் சுற்றட்டும்…

பெண் : சிறகை விரிக்காமல் உயரே பறக்காமல்…
விழி விண்ணை தாண்டட்டும்… ஓஓஹோ…

ஆண் : உந்தன் முன்னே தூங்கும் தோட்டம்…
தொற்று போகட்டும்…
நீயும் சூடா பூக்கள் எல்லாம்…
நெஞ்சில் கேட்கட்டும்…

ஆண் : கடலும் நீயாக புயலும் நானாக…
உன்னில் மையம் கொள்ளட்டும்… ஓஓஹோ…

பெண் : காதல் என்ற வார்த்தையிலே…
ஆயிரம் கவிதைகள் தெரிகிறதே…

குழு : இமைகள் தாக்கி இதயங்களே…
பொடி பொடி பொடியாய் உடைகிறதே…

ஆண் : மயக்க ஊசி உந்தன் பார்வை ஆச்சு…
அது தாக்கி தாக்கி மூர்ச்சை ஆனேன…
மருகி மருகி தினம் உருகி உருகி…
உன்னை தாங்கி தாங்கி மோட்சம் போனேனே…

ஆண் : நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாதே…
என்ன ஆச்சு ஏதும் எனக்கு தெரியாதே…


Notes : Mayakka Oosi Song Lyrics in Tamil. This Song from Yuvan Yuvathi (2011). Song Lyrics penned by Kalai Kumar. மயக்க ஊசி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading