என்னம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகார்த்திக், மாணிக்கவிநாயகம் & பாலேஷ்வித்யாசாகர்தம்பி (2006)

Ennamma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னம்மா தேவி ஜக்கம்மா…
உலகம் தலை கீழா தொங்குது நியாயமா…

—BGM—

ஆண் : ஏ என்னம்மா தேவி ஜக்கம்மா…
உலகம் தலை கீழா தொங்குது நியாயமா…

ஆண் : சின்ன வயசுல சிகரெட் புடிக்கிறான்…
சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்குறான்…
ஹே… சின்ன வயசுல சிகரெட் புடிக்கிறான்…
சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்குறான்…

ஆண் : பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது…
பச்ச தமிழனோ மம்மின்னு சொல்லுறான்…

ஆண் : என்னம்மா தேவி ஜக்கம்மா…
உலகம் தலை கீழா தொங்குது நியாயமா…
என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம்…
தலை கீழா தொங்குது நியாயமா…

—BGM—

ஆண் : சந்தன பூமி… சந்தன பூமி…
கந்தகம் ஆச்சு… கந்தகம் ஆச்சு…
காத்துக்கும் இப்போ திணறுது மூச்சு…

ஆண் : மரம் இல்லா ஊருல மழை எங்க பெய்யுது…
குளத்துலதான் இப்போ கிரிக்கெட்டு நடக்குது…

ஆண் : அட விவசாயம் செய்யின்னா வேணான்னு சொல்லுறான்…
வெளிநாடு போயிதான் ஒட்டகம் மேக்கிறான்…

ஆண் : என்னம்மா தேவி ஜக்கம்மா…
உலகம் தலை கீழா தொங்குது நியாயமா…
என்னம்மா தேவி ஜக்கம்மா உலகம்…
தலை கீழா தொங்குது நியாயமா…

—BGM—

குழு : ஜக்கம்மா ஜக்கம்மா…
ஜக்கம்மா ஜக்கம்மா…
ஜக்கம்மா ஜக்கம்மா…
ஆண் : ஜக்கம்மா ஜக்கம்மா…

—BGM—

ஆண் : கோட்டையில் கொடியெல்லாம் கிழியாம பறக்குது…
குமரிப்பொண்ணு துணி கிழிஞ்சேதான் தொங்குது…

ஆண் : நத்தைக்கு கூட முதுகுல வீடு…
நடைப்பாதைதானே ஏழைக்கு கூடுடி…

ஆண் : அட சாமிக்கு படைக்கிற மனுஷன கும்பிட்டோம்…
சாக்கட அள்ளுற கைகள விட்டுட்டோம்…

ஆண் : என்னம்மா தேவி ஜக்கம்மா…
உலகம் தலை கீழா தொங்குது நியாயமா…
என்னம்மா தேவி ஜக்கம்மா…
உலகம் தலை கீழா தொங்குது நியாயமா…

ஆண் : சின்ன வயசுல சிகரெட் புடிக்கிறான்…
சித்தப்பன் கிட்டயே தீப்பெட்டி கேட்குறான்…

ஆண் : பசுமாடும் ஆத்தாவ அம்மான்னு சொல்லுது…
பச்ச தமிழனோ மம்மின்னு சொல்லுறான்…

—BGM—


Notes : Ennamma Song Lyrics in Tamil. This Song from Thambi (2006). Song Lyrics penned by Vairamuthu. என்னம்மா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading