உன் கண்ணை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரியன்கார்த்திக் & ரம்யாவிஜய் ஆண்டனியுவன் யுவதி

Un Kannai Partha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…
உன் ஓர பார்வை அசைவில்…
மனம் குடை சாயும்…

ஆண் : நீ வந்து போன பிறகு…
தலை கீழாய் மாறும் உலகு…
உன் இல்லம் இருக்கும் திசையில்…
தெரியுது என் பாதம்…

ஆண் : தண்ணீரில் ஆடும் அலையாய்…
காற்றோடு மிதக்கும் இலையாய்…
என் மனதும் மாறுகின்றதே உனதாய்…

ஆண் : சில நேரம் மிகவும் சுகமாய்…
சில நேரம் மிகவும் சுமையாய்…
ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய்…

ஆண் : உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…
உன் ஓர பார்வை அசைவில்…
மனம் குடை சாயும்…

—BGM—

ஆண் : அடி உன்னை போல பெண்ணை…
எங்கும் கண்டதில்லை…
இன்று வரை என் மனதை…
யாருமே ஈர்த்ததில்லை… ஓ ஓஹ் ஓ…

ஆண் : உன் உதடு எந்தன் பேரை சொல்லும் நேரம்…
சிலிர்கிறேன் தவிகிறேன்…
என்வசம் நானும் இல்லை… ஓ ஓஹ் ஓ…

ஆண் : மழை நின்ற போதும் கிளைகள்…
சிறு தூறல் போடுவது போல்…
நீ கடந்த பிறகும் நினைவில் இருப்பாய்…

ஆண் : உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…
உன் ஓர பார்வை அசைவில்…
மனம் குடை சாயும்…

—BGM—

ஆண் : என்னை விட்டு உள்ளம்…
உந்தன் பின்னால் செல்லும்…
தடுக்கிறேன் தவிர்கிறேன்…
இதயமும் கேட்கவில்லை…

ஆண் : நான் இன்று போல…
என்றும் சொக்கிபோனதில்லை…
இதற்குமுன் எனக்கு இந்த…
பரவசம் பாய்ந்ததில்லை…

ஆண் : நீ நேற்று எங்கு இருந்தாய்…
என் நெஞ்சில் இன்று நுழைந்தாய்…
இனி நாளை என்ன அவஸ்தை புரிவாய்…

ஆண் : உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…
உன் ஓர பார்வை அசைவில்…
மனம் குடை சாயும்…

ஆண் : நீ வந்து போன பிறகு…
தலை கீழாய் மாறும் உலகு…
உன் இல்லம் இருக்கும்…
திசையில் தெரியுது என் பாதம்…

ஆண் : தண்ணீரில் ஆடும் அலையாய்…
காற்றோடு மிதக்கும் இலையாய்…
என் மனதும் மாறுகின்றதே உனதாய்…

ஆண் : சில நேரம் மிகவும் சுகமாய்…
சில நேரம் மிகவும் சுமையாய்…
ஐயோ காதல் படுத்துகின்றதே புதிதாய்…

ஆண் : உன் கண்ணை பார்த்த பிறகு…
என் உள்ளே லட்சம் சிறகு…
உன் ஓர பார்வை அசைவில்…
மனம் குடை சாயும்…

—BGM—


Notes : Un Kannai Partha Song Lyrics in Tamil. This Song from Yuvan Yuvathi (2011). Song Lyrics penned by Priyan. உன் கண்ணை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading