| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| யுகபாரதி | மகாலிங்கம் | சி. சத்யா | பக்கா |
Kannukulla Song Lyrics in Tamil
ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வச்சேன்…
நோவாம காக்க…
கண் அவிஞ்சி போனதென்ன…
ஊர்ராரும் பார்க்க…
ஆண் : நல்ல தண்ணி கிணறு ஒன்னு நொடியில…
நஞ்சி பட்டு தூந்தது என் மடியில…
வாழ வந்த தங்கம் நீயும் வழியில… ஆஆ…
வேரறுந்து விழுந்தது ஏன் தெரியல…
ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வச்சேன்…
நோவாம காக்க…
கண் அவிஞ்சி போனதென்ன…
ஊர்ராரும் பார்க்க…
—BGM—
ஆண் : ஆசையில ஒன் முகத்த அரும்பா பாத்திருப்பேன்…
பேசயில தேவதைய குறும்பா பாத்திருப்பேன்…
ஓடி வரும் உன் நடையில் வெள்ளலைய பாத்திருப்பேன்…
நீ உட்காரும் பேரழகில் ஓவியத்த பாத்திருப்பேன்…
ஆண் : அத்தனையும் பார்த்த விழி மூடலையே…
கை இருந்தும் கால இருந்தும்…
மூச்சு விட தோனலையே…
ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வச்சேன்…
நோவாம காக்க…
ஆண் : பார்வையில பேசியத வச்சிருக்கேன் பத்திரமா…
பக்கத்தில நிக்கயிலும் பாக்கல நீ சத்தியமா…
ஆண் : கண்ண கட்டி காட்டுலதான்…
விட்டுட்டியே அப்படியே…
காலு பட்ட மண்ணுலதான்…
சாஞ்ச தென்ன உத்தமியே…
ஆண் : பத்து ஜென்மம் வாழதானே…
நீ பொறந்த…
பால போல திரிஞ்சி ஏண்டி…
பட்டுன்னு வேர் அருந்த…
ஆண் : கண்ணுக்குள்ள உன்ன…
என் கண்ணுக்குள்ள உன்ன…
ஆண் : என் கண்ணுக்குள்ள உன்ன வச்சேன்…
நோவாம காக்க…
கண் அவிஞ்சி போனதென்ன…
ஊர்ராரும் பார்க்க…
ஆண் : நல்ல தண்ணி கிணறு ஒன்னு நொடியில…
நஞ்சி பட்டு தூந்தது என் மடியில…
ஆண் : கண்ணுக்குள்ள… கண்ணுக்குள்ள…
Notes : Kannukulla Song Lyrics in Tamil. This Song from Pakka (2018). Song Lyrics penned by Yugabarathi. என் கண்ணுக்குள்ள பாடல் வரிகள்.
