மருமகனே மருமகனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கிருஷ்ணராஜ் & தேவாதேவாதேவா

Marumagane Song Lyrics in Tamil


ஆண் : மருமகனே மருமகனே மாமன்காரன் நானே…
உன் கால் வலிக்கும் கை வலிக்கும்…
தோல் வலிக்கும் தொடை வலிக்கும்…
கண்ணிபொண்ணு கையிபட்டா…
எல்லா நோவும் பறந்து போகும்…

ஆண் : அப்படி போடு…

ஆண் : ஆ… காபி தண்ணி போடட்டுமா…
டீ தண்ணி போடட்டுமா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மாப்புள காபி தண்ணி போடட்டுமா…
டீ தண்ணி போடட்டுமா…
சொல்லுங்க மருமகனே என் மம்முதனே…
சொல்லுங்க மருமகனே…

ஆண் : காபி தண்ணி வேணா மாமா…
எனக்கு டீ தண்ணி வேணா மாமா…
பச்ச தண்ணி போதும் மாமா…
என் தாகத்துக்கு பச்ச தண்ணி போதும் மாமா…

ஆண் : கம்மஞ்சோறு ஆக்கட்டுமா…
நெல்லு சோறு ஆக்கட்டுமா…
கம்மஞ்சோறு ஆக்கட்டுமா…
நெல்லு சோறு ஆக்கட்டுமா…
சொல்லுங்க மருமகனே என் மம்முதனே…
சொல்லுங்க மருமகனே…

ஆண் : கம்மஞ்சோறு வேணா மாமா…
எனக்கு நெல்லு சோறும் வேணாம் மாமா…
கூல் இருந்தா போதும் மாமா…
நான் ஊத்திக் கொள்ள கூல் இருந்தா போதும் மாமோய்…

BGM

ஆண் : கறிக்கொழம்பு ஆக்கட்டுமா…
ஆஆஆ… ஆஆ… ஓய்…
கறிக்கொழம்பு ஆக்கட்டுமா…
மீன் கொழம்பு ஆக்கட்டுமா…
சொல்லுங்க மருமகனே என் மம்முதனே…
சொல்லுங்க மருமகனே…

ஆண் : கறிக்கொழம்பு வேணா மாமா…
எனக்கு மீன் கொழம்பும் வேணா மாமா…
ஊறுகா இருந்தா போதும் மாமா…
நான் தொட்டு தின்ன ஊறுகா இருந்தா போதும் மாமா… ஹோய்…

ஆண் : வாழை இலை போடட்டுமா…
ஆஆஆ… ஆஆ… ஓய்…
வாழை இலை போடட்டுமா…
தைய இலை போடட்டுமா…
சொல்லுங்க மருமகனே என் மம்முதனே…
சொல்லுங்க மருமகனே சொல்லுங்க…

ஆண் : வாழை இலை வேணாம் மாமா…
எனக்கு தைய இலை வேணாம் மாமா…
கையில்தான் போடு மாமா…
என் அருமை மாமா கையில்தான் போடு மாமா…

BGM

ஆண் : தென்னம் பாய விரிக்கட்டுமா… ஆஆஆ… ஆஆ…
தென்னம் பாய விரிக்கட்டுமா…
ஈச்சம் பாய விரிகட்டுமா…
சொல்லுங்க மருமகனே…
நீ படுத்துகத்தான் சொல்லுங்க மருமகனே…
சொல்லுங்க மாப்புளை…

ஆண் : தென்னம் பாயும் வேணாம் மாமா…
எனக்கு ஈச்சம் பாயும் வேணாம் மாமா…
கோணியிருந்தா போதும் மாமா…
நீ நெல்லு கொட்டும் கோணியிருந்தா போதும் மாமா…

BGM

ஆண் : சின்ன பொண்ணு நல்லாருக்கா… ஆஆஆ… ஆஆ…
சின்ன பொண்ணு நல்லாருக்கா…
பெரிய பொண்ணு நல்லாருக்கா…
சொல்லுங்க மருமகனே…
நீ ஏத்துகத்தான் சொல்லுங்க மருமகனே…
ஏனுங்க என்ன சொல்றிங்க…

ஆண் : சின்ன பொண்ணும் நல்லா இல்ல…
பெரிய பொண்ணும் நல்லா இல்ல…

ஆண் : என்னடா இது…
எத்தனை பொண்ண கொண்டாந்து நிறுத்திகிறேன்…
ஒன்னு கூட நல்லா இல்லைங்குற…
இதுக்கு மேல நான் எங்கடா போவேன்…
யார வேணும் சொல்லி தொலைடா…

ஆண் : சின்ன பொண்ணும் வேணாம் மாமா…
பெரிய பொண்ணும் வேணாம் மாமா…
அத்தை மட்டும் போதும் மாமா…

ஆண் : யார்ரா என்ற பொண்டாட்டியா…
ஆண் : அத்தை மட்டும் போதும் மாமா…
என் மக்கு மாமா…
மத்ததெல்லாம் சொத்த மாமா…
ஆண் : டேய் டேய் டேய்…

ஆண் : அத்தை மட்டும் போதும் மாமா…
என் மக்கு மாமா…
மத்ததெல்லாம் சொத்த மாமா…

ஆண் : அட்றா செருப்பால ராஸ்கோலு…


Notes : Marumagane Song Lyrics in Tamil. This Song from Deva (1995). Song Lyrics penned by Kalidasan. மருமகனே மருமகனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading