மார்கழிப் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஷோபா ஷங்கர்ஏ.ஆர்.ரகுமான்மே மாதம்

Margazhi Poove Song Lyrics in Tamil


BGM

பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

பெண் : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…

பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்…
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்…
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்…
நடை பாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்…

பெண் : வாழ்க்கையின் ஒரு பாதி…
நான் என்று வசிப்பேன்…
வாழ்க்கையின் மறு பாதி…
நான் என்று ரசிப்பேன்…
காற்றில் வரும் மேகம் போலே…
நான் என்றும் மிதப்பேன்…

பெண் : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

{ குழு : வெண்பா பாடி வரும் வண்டுக்கு…
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்…
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு…
சந்தம் தந்து விடும் மைனாக்கள்… } * (2)

BGM

பெண் : காவேரி மணலில் நடந்ததுமில்லை…
கடற்கரை அலையில் கால் வைத்ததில்லை…
சுதந்திர வானில் பறந்ததுமில்லை…
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை…

பெண் : சாலையில் நானாகப் போனதுமில்லை…
சமயத்தில் ஆணாக ஆனதுமில்லை…
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை…

குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
பெண் : உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

குழு : மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை…
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை…

குழு : மார்கழிப் பூவே மார்கழிப் பூவே…
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்…

{ குழு : வெண்பா பாடி வரும் வண்டுக்கு…
செந் தேன் தந்து விடும் செம் பூக்கள்…
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு…
சந்தம் தந்து விடும் மைனாக்கள் } * (4)

BGM


Notes : Margazhi Poove Song Lyrics in Tamil. This Song from May Madham (1994). Song Lyrics penned by Vairamuthu. மார்கழிப் பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading