மனிதா மனிதா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துதிப்புதேவி ஸ்ரீ பிரசாத்புலி

Manidha Manidha Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

—BGM—

குழு (ஆண்கள்) : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

ஆண் : மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா…
ஓ… மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காற்றின் பிள்ளைகள் நீங்கள்…
இந்தக் காடே உங்கள் உரிமை…
யாரும் இல்லை அடிமை…
அட யாவும் இங்கே பொதுவுடைமை…

ஆண் : மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா…

—BGM—

குழு (ஆண்கள்) : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…

—BGM—

ஆண் : கூட்டுப் பறவைகளாய்…
இந்தக் காட்டில் பிறந்தோம் கை வீசி திரிந்தோம்…
சிந்தும் வேர்வையினால்…
நவ தானியம் விளைந்தது நம்மாலே…

ஆண் : பட்டாம் பூச்சிகளாய் இங்கு பறந்தோம் திரிந்தோம்…
ஒன்னாக வளர்ந்தோம்…
வஞ்சகர் சூழ்ச்சியிலே…
நம் வாழ்க்கை தேய்ந்தது பின்னாலே…

ஆண் : உடையட்டும் உடையட்டும்…
விலங்குகள் உடையட்டும்…
முடிவெடு தமிழ் இனமே…

ஆண் : திசையெட்டும் திசையெட்டும்…
தெறிக்கட்டும் திறக்கட்டும்…
புறப்படு புலி இனமே…

ஆண் : மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா…

—BGM—

ஆண் : ஓ… ஓ… மண்ணின் மைந்தர்களே…
சொந்த மண்ணை மீட்போம்…
என்னோடு வாங்க…

ஆண் : ஆயுதம் தேவையில்லை…
சில ஆயிரம் பேர்கள் கைகொடுங்க…

ஆண் : வாழ்வது ஒருமுறைதான்…
உயிர் போவதும் போவதும்…
ஒருமுறை தானே…

ஆண் : தலைமுறை வாழ்வதற்கு…
சில தலைகளை பலியிடத் தயங்காதே…

ஆண் : விதிகளும் பொடிபட…
வேதனை உடைபட…
விடுதலை கொடுத்துவிடு…

ஆண் : விடிவதில் விடிவதில்…
தாமதம் ஆனால்…
வானத்தைக் கிழித்துவிடு…

ஆண் : மனிதா மனிதா தன்மான மனிதா…
புயலாய் எழுந்து போராடு மனிதா…

குழு (ஆண்கள்) : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ…


Notes :  Manidha Manidha Song Lyrics in Tamil. This Song from Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. மனிதா மனிதா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading