மன்னவனே மன்னவனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் சந்தோஷ், எம். எல். ஆர். கார்த்திகேயன், சின்மயி & அனிதா கார்த்திகேயன்தேவி ஸ்ரீ பிரசாத்புலி

Mannavanae Mannavanae Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மன்னவனே மன்னவனே…
மாயலோக மன்மதனே…
தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே…

—BGM—

பெண் : வல்லவனே வல்லவனே…
யானை பலம் உள்ளவனே…
வானவில்லால் அம்பு விடும் வல்லவனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : கத்தியின்றி ரத்தமின்றி…
வெறும் கண்ணால் கொலை செய்வாய்…
இவள் ராணி கோட்டை இளவரசி…
உனக்கென்ன வேண்டும்…
பொன்னின் மலையா… பெண்ணின் சிலையா…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாயலோக மன்மதனே…
தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே…

பெண் : வல்லவனே வல்லவனே…
யானை பலம் உள்ளவனே…
வானவில்லால் அம்பு விடும் வல்லவனே…

—BGM—

ஆண் : என் வாளும் வேலும் வெல்ல…
வானை முட்டித்தள்ள…
சிறகு முளைத்த வேங்கை நானே இப்போது…

—BGM—

பெண் : என் வானம் தாண்டி செல்ல…
நீ மாயபறவை அல்ல…
என்னை மீறி வேங்கை எங்கும் தப்பாது…

—BGM—

ஆண் : வானில் விண்மீனோ நானே…
கடலில் கருமீனோ நானே…
ரெண்டும் அட உந்தன் கையில் சேராது…

பெண் : வானம் என் வளையல் பெட்டி…
கடலோ என் நீச்சல் தொட்டி…
மீன்கள் என் காலின் மெட்டி…
மாயஜாலம் ஓயாதிங்கே…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாயலோக மன்மதனே…
தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே…

பெண் : வல்லவனே வல்லவனே…
யானை பலம் உள்ளவனே…
வானவில்லால் அம்பு விடும் வல்லவனே…

—BGM—

ஆண் : ஹே… ஆண்டான் அடிமை எல்லாம்…
ஆண்டவன் இட்ட சட்டம்…
மேலோர் கீழோர் எல்லாம் விதியின் உத்தரவு…

—BGM—

ஆண் : ஹே… ஆண்டான் அடிமை எல்லாம்…
சட்டம் அல்ல திட்டம்…
இறைவன் பேரால் மனிதன் செய்த சச்சரவு…

—BGM—

ஆண் : காட்டில் இது எங்கள் ஆட்சி…
நீயோ ஒரு பட்டாம்பூச்சி…
காற்றை உன் சிறகில் ஏற்ற பார்க்காதே…

ஆண் : பூவில் சிறு தேனை கொல்ல…
ஆட்சி அது தேவை இல்லை…
எரியும் தீக்குச்சி போதும்…
கரியாய் மாறும் மொத்தக்காடும்…

—BGM—

பெண் : ஆண்மையுள்ள ராணி இவள்…
ஆள வந்த ஞானி இவள்…
ஆண்களோடு போட்டியிட்டு தோற்றதில்லை…

பெண் : வான் அணிந்த வெண்ணிலவும்…
தேய்வதுண்டு சாய்வதுண்டு…
நான் அணிந்த கிரீடம் என்றும் சாய்வதில்லை…

—BGM—


Notes :  Mannavanae Mannavanae Song Lyrics in Tamil. This Song from Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. மன்னவனே மன்னவனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading