புலி புலி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துமனோ & பிரியதர்ஷினிதேவி ஸ்ரீ பிரசாத்புலி

Puli Puli Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எங்கமக்கா எங்கமக்கா…
ஓடிவாங்க எங்கமக்கா…
எங்கமக்க ஒன்னுபட்டா…
எதிரிக்கெல்லாம் டங்கணக்கா…

ஆண் : ஹே… எங்கமக்கா எங்கமக்கா…
ஓடிவாங்க எங்கமக்கா…
அட எங்கமக்க ஒன்னுபட்டா…
எதிரிக்கெல்லாம் டங்கணக்கா…

ஆண் : காத்திருக்க நேரம் இல்லடா…
தெம்மாங்கு பாடும் காத்துக்கென்ன…
கைவிலங்கு போடா…

ஆண் : கத்தி புத்தி ரெண்டும் உண்டாடா…
என் பாசமுள்ள தம்பி தம்பி…
நம்பி நம்பி வாடா…

ஆண் : கொடுமையெல்லாம் அடிபடவே…
அடிமை இனம் விடுபடவே…
கிழக்கு வெளுக்க விழியும் சிவக்க…
எழுந்து வருகுதே…

ஆண் : ஹே… புலி புலி புலி புலி…
புலி புலி புலி புலி…
அட மண்ணைவிட்டு விண்ணைத்தொட்டு…
சுற்றிவரும் சூரப்புலி…

—BGM—

ஆண் : ஹே… புலி புலி புலி புலி…
புலி புலி புலி புலி…
அட அச்சம் விட்டு உச்சம்தொட்டு…
வெற்றி பெறும் வீரப்புலி…

—BGM—

பெண் : ஆத்தி… ஏ… வந்தான் வந்தான் பாரு…
காட்டின் அழகு ராசாவே…
அடி ஆத்தி கன்னி பொன்னின் நெஞ்சில்…
காதல்… ஏ… கலக்கும் ராசாவே…

—BGM—

ஆண் : ஹே… மண்ணை மீறாமலே…
விதையும் முளைக்குமா…
தறிபடாத நூலு என்ன ஆடையாகுமா…

குழு (ஆண்கள்) : ஹே… ராசாவே…
ராசாவே… ராசாவே…

ஆண் : எங்கள் தாய் நாட்டையே…
பஞ்சம் வந்து ஆளுமா…
புலி குகையில் எலிவந்து…
வாலை ஆட்டுமா…

ஆண் : உன்னை நீ நம்பி உழைத்தே பாரு…
ஊரு தன்னாலே மாறாது…
மாற்றம் உன்னோடு தொடங்கட்டும் தோழா…
விழிக்கும் போது நமது கனவு பலிக்கவேண்டுமே…

ஆண் : ஹே… புலி புலி புலி புலி…
புலி புலி புலி புலி…
அட மண்ணைவிட்டு விண்ணைத்தொட்டு…
சுற்றிவரும் சூரப்புலி…

ஆண் : ஹே… எங்கமக்கா எங்கமக்கா…
ஓடிவாங்க எங்கமக்கா…
அட எங்கமக்க ஒன்னுபட்டா…
எதிரிக்கெல்லாம் டங்கணக்கா…

—BGM—

ஆண் : சித்தம் கொதிக்குதே…
ரத்தம் தீயாகுதே…
யுத்தம் செய்ய வருகவென்று…
சத்தம் கேட்குதே…

குழு (ஆண்கள்) : ஹே… ராசாவே…
ராசாவே… ராசாவே…

ஆண் : திட்டம் இருக்கணும்…
தொட்டா ஜெயிக்கணும்…
நான் தொட்ட திட்டம் ஏதும் தோற்றதில்லையே…

ஆண் : வானம் எப்போதும் தீர்ந்தா போகும்…
வாழ்வில் நம்பிக்கை தீராதே…
நாளை நம்கையில் வந்தே தீரும்…
வலது காலை எடுத்து வாடா இளைய தோழனே…

ஆண் : ஹே… புலி புலி புலி புலி…
புலி புலி புலி புலி…
அட மண்ணைவிட்டு விண்ணைத்தொட்டு…
சுற்றிவரும் சூரப்புலி…

ஆண் : ஹே… புலி புலி புலி புலி…
புலி புலி புலி புலி…
அட அச்சம் விட்டு உச்சம்தொட்டு…
வெற்றி பெறும் வீரப்புலி…

—BGM—


Notes : Puli Puli Song Lyrics in Tamil. This Song from Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. புலி புலி பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top