மலர்களே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.என். சுரேந்தர்தேவாஒன்ஸ் மோர்

Malargale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…

ஆண் : நதிகளே உங்களை நான் காதலிக்கிறேன்…
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு…
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்…
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி…

ஆண் : உலகமே என் வீடு…
இளமையே விளையாடு…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…

ஆண் : குயில்களே…

—BGM—

ஆண் : நதிகளை மட்டும் அல்ல…
அதன் நுரையையும் காதலித்தேன்…
வெண்ணிலவை மட்டும் அல்ல…
அதன் கரையையும் காதலித்தேன்…

ஆண் : ஒரு பட்டுபூச்சியை காதலித்து பார்த்தேன்…
அதன் உதிர்ந்த சிறகையும் மூடி வைத்து காத்தேன்…

ஆண் : அந்தி வானத்தின் மேலே…
முகில் போவதை போலே…
எந்தன் உடல் அங்கு பரந்திட வழி இல்லையா…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…

ஆண் : நதிகளே…

—BGM—

ஆண் : மழை துளி மழை துளி முத்துகளாய் சிதறுது…
சிதறிடும் முத்துக்களை சேமித்தால் நல்லது…

ஆண் : அந்த வானவில்லிலே மொத்த நிறம் ஏழு…
அதில் ஒற்றை நிறத்திலே ஊஞ்சல் கட்டி ஆடு…

ஆண் : சுகமானது பூமி…
இதமானது வாழ்கை…
இந்த உலகத்தை ரசிக்கின்ற கவிஞன் இவன்…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…

ஆண் : நதிகளே உங்களை நான் காதலிக்கிறேன்…
நடுக்கம் என்ன என்னை வந்து தொட்டு விடு…
தென்றலே உன்னை நான் காதலிக்கிறேன்…
மறுப்பு என்ன என்னை வந்து கட்டி பிடி…

ஆண் : உலகமே என் வீடு…
இளமையே விளையாடு…

ஆண் : மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…

ஆண் : குயில்களே…

—BGM—


Notes : Malargale Song Lyrics in Tamil. This Song from Once More (1997). Song Lyrics penned by Vairamuthu. மலர்களே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading