மெட்டி ஒலி காற்றோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா & எஸ். ஜானகிஇளையராஜாமெட்டி

Metti Oli Kaatrodu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட…
மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட…
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக…
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக…
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே…
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே…

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட…

—BGM—

ஆண் : ஓஓஓ… வாழ் நாளெல்லாம் உன்னோடுதான்…
வாழ்ந்தாலே போதும்…
வாழ்வென்பதின் பாவங்களை…
நாம் காண வேண்டும்…

ஆண் : நாளும் பல நன்மை…
காணும் எழில் பெண்மை…
பூவை வைத்த பூ வாசம்…
போதை கொண்ட உன் நேசம்…
தென்றல் சுகம்தான் வீசும் தேடாமல் சேராதோ…

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட…

—BGM—

ஆண் : ஏ… வெண் முல்லையே என் கண்மணி…
ஊர்கோல நேரம்…
பொன் காலடி படும் போதிலே…
பூந்தென்றல் பாடும்…

ஆண் : பார்வை பட்ட காயம்…
பாவை தொட்டுக் காயும்…

ஆண் : எண்ணம் தந்த முன்னோட்டம்…
என்று அந்த வெள்ளோட்டம்…
கண்ட பின்பு கொண்டாட்டம்…
கண்டாடும் என் நெஞ்சம்…

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட…
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக…
மேனி ஒரு பூவாக மெல்லிசையின் பாவாக…
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே…
கோதை மலர் பூம்பாதம் வாவென்னுதே…

ஆண் : மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சைத் தாலாட்ட…


Notes : Metti Oli Kaatrodu Song Lyrics in Tamil. This Song from Metti (1982). Song Lyrics penned by Gangai Amaran. மெட்டி ஒலி காற்றோடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading