மலை கோவில் வாசல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாஇளையராஜாவீரா (1994)

Malai Kovil Vaasal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மலை கோவில் வாசலில்…
கார்த்திகை தீபம் மின்னுதே…
விளக்கேற்றும் வேளையில்…
ஆனந்த கானம் சொல்லுதே…

குழு : முத்து முத்து சுடரே சுடரே கொடு…
வேண்டிடும் வரங்களையே…
வண்ண வண்ண கதிரே கதிரே தொடு…
ஆயிரம் சுகங்களையே…

குழு : முத்து முத்து சுடரே சுடரே கொடு…
வேண்டிடும் வரங்களையே…
வண்ண வண்ண கதிரே கதிரே தொடு…
ஆயிரம் சுகங்களையே…

ஆண் : மலை கோவில் வாசலில்…
கார்த்திகை தீபம் மின்னுதே…
விளக்கேற்றும் வேளையில்…
ஆனந்த கானம் சொல்லுதே…

—BGM—

பெண் : நாடகம் ஆடிய பாடகன்… ஓஓ… ஓஓ…
நீ இன்று நான் தொடும் காதலன்… ஓஓ… ஓஓ…

ஆண் : நீ சொல்ல நான் மெல்ல மாறினேன்…
நன்றியை வாய் விட்டு கூறினேன்…

பெண் : தேர் அழகும்…
சின்ன பேர் அழகும்…
உன்னை சேராதா…
உடன் வாராதா…

ஆண் : மான் அழகும்…
கெண்டை மீன் அழகும்…
கண்கள் காட்டாதா …
இசை கூட்டாதா…

பெண் : பாலாடை இவன் மேலாட…
வண்ண நூலாடை இனி நீயாகும்…

ஆண் : மலை கோவில் வாசலில்…
கார்த்திகை தீபம் மின்னுதே…
விளக்கேற்றும் வேளையில்…
ஆனந்த கானம் சொல்லுதே…

குழு : முத்து முத்து சுடரே சுடரே கொடு…
வேண்டிடும் வரங்களையே…
வண்ண வண்ண கதிரே கதிரே தொடு…
ஆயிரம் சுகங்களையே…

பெண் : மலை கோவில் வாசலில்…
கார்த்திகை தீபம் மின்னுதே…

—BGM—

ஆண் : நான் ஒரு பூச்சரம் ஆகவோ… ஓஓ… ஓஓ…
நீள் குழல் மீதினில் ஆடவோ… ஓஓ… ஓஓ…

பெண் : நான் ஒரு மெல்லிசை ஆகவோ…
நாளும் உன் நாவினில் ஆடவோ…

ஆண் : நான் படிக்கும் தமிழ் கீர்த்தனங்கள்…
இங்கு நாள் தோறும் உந்தன் சீர் பாடும்…

பெண் : பூ மரத்தில் பசும் பொன் நிறத்தில்…
வளை பூத்தாடும் உந்தன் பேர் பாடும்…

ஆண் : மா கோலம்…
மழை நீர் கோலம்…
வண்ண நாள் காணும்…
இந்த ஊர்கோலம்…

பெண் : மலை கோவில் வாசலில்…
கார்த்திகை தீபம் மின்னுதே…

ஆண் : விளக்கேற்றும் வேளையில்…
ஆனந்த கானம் சொல்லுதே…

குழு : முத்து முத்து சுடரே சுடரே கொடு…
வேண்டிடும் வரங்களையே…
வண்ண வண்ண கதிரே கதிரே தொடு…
ஆயிரம் சுகங்களையே…

குழு : முத்து முத்து சுடரே சுடரே கொடு…
வேண்டிடும் வரங்களையே…
வண்ண வண்ண கதிரே கதிரே தொடு…
ஆயிரம் சுகங்களையே…

ஆண் & பெண் : மலை கோவில் வாசலில்…
கார்த்திகை தீபம் மின்னுதே…
விளக்கேற்றும் வேளையில்…
ஆனந்த கானம் சொல்லுதே…


Notes : Malai Kovil Vaasal Song Lyrics in Tamil. This Song from Veera (1994). Song Lyrics penned by Vaali. மலை கோவில் வாசல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading