மகிழினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம் சாங்ஸ்
மதன் கார்க்கிகீர்த்தனா வைத்தியநாதன்கோவிந்த் வசந்தாமகிழினி

Magizhini Song Lyrics in Tamil


BGM

பெண் : காற்றோடு ஆடும் மலராக நீ ஆடிட…
முகில் என்னை வாழ்த்தி தூறுமே…
நீரோடு ஆடும் நிழல்போல நீ ஆடிட…
விட்டில்கள் கை தட்டி உன்னோடு சேர்ந்தாடுமே…

பெண் : காற்றின் அலையில் ஆடும் இலையாய்…
வெயிலோடு நீ ஆட…
மேக மலையில் ஆடும் நிலவாய்…
இரவோடு விளையாட…

பெண் : ஆடு அழகே ஆடு அழகே சேர்ந்தாதடி…
ஆடு அழகே ஆடு அழகே…
உலகங்கள் உனக்காய் பாரடி…
அழகே…

BGM

பெண் : புல்லின் மீது பூவை போல் உனை பார்த்த நொடி…
என்னுள் ஏதோ மாற்றம் நேர்ந்ததடி…
காலம் நம்மை ஒன்று சேர்த்ததே அந்த அழகு நொடி…
என்தான் வாழ்க்கை முழுமையானதடி…

பெண் : பாடலுடனே ராகம் இணைந்தே…
தாளத்தில் நடைபோட…
தென்றலுடனே வாசமென…
நீ என்னோடு இணைந்தாட…

பெண் : ஆடு அழகே ஆடு அழகே சேர்ந்தாதடி…
ஆடு அழகே ஆடு அழகே…
உலகங்கள் நமக்காய் பாரடி…
அழகே…

BGM

பெண் : ஆடும் மலர்களை ஊரும் வெறுத்திட…
வீசும் புயல் நம்மை பெய்தே எறித்திட…
கண்ணின் துளியென உனை பிரிந்திட…
இதயம் இதயம் இதயம் சுருங்கி எறிந்திட…

பெண் : ஜாதி மத நிறம் கடந்த என் காதல்…
பாலை கடந்திட உலகுடன் மோதல்…
யார் இந்த சட்டங்கள் செய்தாரோ…
பூவோடு பூ ஆடக் கூடாது என்றிங்கு…
வேலி போட்டு காவல் காக்க வாசம் கேக்காது என்று…

பெண் : என்னோடு சேர்ந்தாதடி…
நம் கையில் வானம்…
காதில் நற்கானம்…
யாரென்ன சொன்னாலும் கேட்காதடி…

BGM


Notes : Magizhini Song Lyrics in Tamil. This Song from Saregama Tamil (2021). Song Lyrics penned by Madhan Karky. மகிழினி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading