அமோர்

பாடலாசிரியர்கள்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சஞ்சய் பிரசாத் கே.ஆர் & கோபி முருகன்ஆதித்யா ஆர் கேபிரணவ் ஆதித்யாசரிகம தமிழ்

Amour Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில நேரம் உன்னை காண…
என் மனமும் கேட்பது ஏனோ…
பல நேரம் என்னுள் நானே…
சொல்லாமல் சிரிப்பது ஏனோ…

ஆண் : சில நேரம் உன்னை காண…
என் மனமும் கேட்பது ஏனோ…
பல நேரம் என்னுள் நானே…
சொல்லாமல் தொலைவது ஏனோ…

ஆண் : என் கண்ணுள் உன்னை வைத்தேன்…
உன் பின்னால் நானும் வந்தேன்…
என் கோபம் என்னைவிட்டு போனதே…

ஆண் : என் சுவாசம் நீயேதானே…
என் மொழியும் நீயேதானே…
சொல்லாமல் போன பின்பும்…
உன்னை தேடி நானும் வந்தேனே…

ஆண் : காலங்கள் போன பின்பும்…
என்னுயிரும் பிரிந்த பின்பும்…
என்னுள்ளே நீதான் இருப்பாயே…

ஆண் : வெகுதூரம் போன பின்பும்…
என்னை நீ மறந்த பின்பும்…
என்னுள்ளே நீதான் இருப்பாயே…

BGM

ஆண் : உன்னோடு நான் வாழ்ந்த காலங்கள் எல்லாம்…
மனதுக்குள் கேட்கிறதே…
நீ சொன்ன வார்த்தைகள் கவிதை போல…
என்னுள்ளே இனிக்கிறதே…

ஆண் : உன் முடிவும் தேவை இல்லை…
பதிலும் தேவை இல்லை…
நினைவு போதும் எனக்கு…

ஆண் : என் கனவில் நீயும் வந்தாய்…
விழியில் நிலைத்து நின்றாய்…
நிஜங்கள் மறக்க செய்தாய்…

ஆண் : காலங்கள் போன பின்பும்…
என்னுயிரும் பிரிந்த பின்பும்…
என்னுள்ளே நீதான் இருப்பாயே…

ஆண் : வெகுதூரம் போன பின்பும்…
என்னை நீ மறந்த பின்பும்…
என்னுள்ளே நீதான் இருப்பாயே…

BGM


Notes : Amour Song Lyrics in Tamil. This Song from Saregama Tamil (2022). Song Lyrics penned by Sanjay Prashadh KR & Gopi Murugan. அமோர் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top