பொண்ணு பாக்க போறோம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிஜெய் & நமீதா பாபுஸ்ரீகாந்த் தேவாடிவோ மியூசிக்

Ponnu Paaka Porom Song Lyrics in Tamil


BGM

குழு : குலசாமி தந்த வரமா…
எங்க அப்பா பாத்த பொண்ணு…

குழு : இந்திரன் சந்திரன் எல்லாம்…
நேரில் அட்சத தூவும் நின்னு…

குழு : குலமகளாக வந்து…
எங்க குடும்பத்த தாங்கும் கண்ணு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : சென்மம் முழுசும் தாங்க…
இனி உயிர எண்ணும் ஒன்னு…

BGM

ஆண் : கண்ணாளமே கண்ணாளமே…
கட்டிக் கொள்ள போறேனே…
கண்ணாலத்தான் கண்ணாலத்தான்…
பேசிக் கொள்ள வாறானே…

ஆண் : உறவெல்லாம் சேத்துவைக்கும்…
உறவும் நீயே… நீயே…
உறங்காம தவிச்சேன் நான்…
அட உன்ன பாத்திடதானே…

ஆண் : இந்த ஊரு மெச்ச…
கைய பிடிக்க வாறேன் புள்ள…
நீ கேட்டுபுட்டா…
உசுர அள்ளித் தாரேன் மெல்ல…
உன் வளையோச கேட்க கேட்க…
சொக்கி போவேன் மயங்கிபோவேன்…

ஆண் : நான் பொண்ணு பாக்க போறேன்…
பொண்ணு பாக்க போறேன்…
தேவதைய பாக்க போறேன்…

ஆண் : நான் உன்ன பாக்க வாறேன்…
உன்ன பாக்க வாறேன்…
வெத்தலைய மாத்த போறேன்…

BGM

குழு : ராச்திக்கே…
உல்லாசன் வாறான்…
நம்ம தங்கத்துக்கே…
மவராசன் வாறான்…

குழு : அட அல்லி பூவே புள்ளி மானே…
அந்தி சாயும் வேளையில…
சல சல சல சல சல…

BGM

ஆண் : ஒத்த சொல்லு ஒத்த சொல்லு…
நீ சொன்னா போதும் நில்லு…
ஒரு பந்தக்காலு நட்டு வைக்க…
சொர்க்கம் மண்ணில் தோன்றுமே…

ஆண் : மஞ்ச தாலி மஞ்சள் தாலி…
மணிக்கழுத்தில் ஏறிடவே…
அந்த மந்திரம் முழங்க மங்கலம் ஒலிக்க…
இன்பம் கோடி நீளுமே…

ஆண் : மின்னும் வெள்ளி மீன் எடுத்து…
உன் காலில் கொலுசாய் நான் இடுவேன்…
கண்ணில் இமையைப் போல் இருந்து…
உன் நிழலைப் போல நான் வருவேன்…

ஆண் : அன்னம் தண்ணி தேவையில்ல…
அடி உன்ன பத்தி பேசயில…
உன் அழக பத்தி பேசயில…
இந்த பூமியில் புதுசா பாஷை இல்ல…

ஆண் : என்ன தாலட்டவே பாராட்டவே…
வாழ்வின் துணையாய் நீ வந்தாய்…

ஆண் : நான் பொண்ணு பாக்க போறேன்…
பொண்ணு பாக்க போறேன்…
தேவதைய பாக்க போறேன்…

ஆண் : நான் உன்ன பாக்க வாறேன்…
உன்ன பாக்க வாறேன்…
வெத்தலைய மாத்த போறேன்…

BGM

பெண் : கண்ணாளனே கண்ணாளனே…
என் ஜீவனே நீதானே…
உன்னோடுதான் உன்னோடுதான்…
எப்போதுமே வாழ்வேனே…

பெண் : ராமரப்போல தருமரப்போல…
என் பாசக்காரன் வந்தான்…
பாசத்தையும் நேசத்தையும்…
அவன் அள்ளி அள்ளி தந்தான்…

பெண் : அவன் சிரிச்சதுமே…
சொக்கிபுட்டேன் நான் உடனே…
அவன் நடந்து வந்தா…
சொர்க்கநாதர் போலவே…

பெண் : அவன் தமிழ் பேச்ச கேட்க கேட்ட…
கிறங்கி போனேன் மயங்கி போனேன்…
என் சொக்கத்தங்க மாமா…
சொக்கத்தங்க மாமா…
உன்ன போல யாரும் இல்ல…
அந்த மதுர வீரன் சாமிபோல…
வச்சிருக்கேன் மனசுக்குள்ள…

BGM


Notes : Ponnu Paaka Porom Song Lyrics in Tamil. This Song from Divo Music (2023). Song Lyrics penned by Arunbharathi. பொண்ணு பாக்க போறோம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading