மானுக்கும் மீனுக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாபார்வதி என்னை பாரடி

Maanukkum Meenukkum Song Lyrics in Tamil

பெண் : ஏஹே லாலா லாலாலா…
ஏஹே லாலா லாலாலா…

BGM

குழு : லல்லலா லல்லா லல்லா…
லால லால லாலா…

BGM

பெண் : மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்…
தடைகள் கிடையாது…
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்…
கவலைகள் இனி ஏது…

பெண் : எண்ணம் போலவே துள்ளி ஆடடி…
வண்ணப் பாவையே விந்தை காணும் நேரம்…
இங்கே வாவா வாவா…

குழு : மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்…
தடைகள் கிடையாது…
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்…
கவலைகள் இனி ஏது…

BGM

பெண் : மாஞ்சோலைக் குயில் ஒன்றின் குரல் கேளடி…
மகிழ்ந்தாடும் அதற்கிங்கு சிறை ஏதடி…

பெண் : சாய்ந்தாடி சதிராடும் மலர்ச் சோலைகள்…
சரியாக ஜதி போடும் கிளிப் பிள்ளைகள்…

பெண் : மனம் அங்கு தாவுதே…
பின் பாட்டு பாடுதே…
இளம் தென்றல் வீசுதே…
கைத்தாளம் போடுதே…

பெண் : கம பஸநிஸ நிஸக ரிகஸ…
நிஸபநி மபகம ஸநிபம…
கம பரிஸரி ரிகஸ நிஸப…
நிஸகரி ஸரிநிஸ நிபமக…

குழு : மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்…
தடைகள் கிடையாது…
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்…
கவலைகள் இனி ஏது…

பெண் : எண்ணம் போலவே துள்ளி ஆடடி…
வண்ணப் பாவையே விந்தை காணும் நேரம் இங்கே…
குழு : வாவா வாவா…

குழு : மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்…
தடைகள் கிடையாது…
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்…
கவலைகள் இனி ஏது…

BGM

பெண் : வெண்மேகம் பூத்தூவும் என் பாதையில்…
மென்காற்று தாலாட்டும் என் மேடையில்…
ஏன் என்று கேட்காத ராஜாங்கத்தில்…
எதிர் பாட்டு எனக்கேது என் வாழ்க்கையில்…

பெண் : தேவாதி தேவர்கள் நல்வாழ்த்து கேளடி…
ராஜாதி ராஜனும் என் காலில் தானடி…

பெண் : கம பஸநிஸ நிஸக ரிகஸ…
நிஸபநி மபகம ஸநிபம…
கம பரிஸரி ரிகஸ நிஸப…
நிஸகரி ஸரிநிஸ நிபமக…

குழு : மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்…
தடைகள் கிடையாது…
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்…
கவலைகள் இனி ஏது…

பெண் : எண்ணம் போலவே துள்ளி ஆடடி…
வண்ணப் பாவையே விந்தை காணும் நேரம் இங்கே…
குழு : வாவா வாவா…

குழு : மானுக்கும் மீனுக்கும் மயிலுக்கும் குயிலுக்கும்…
தடைகள் கிடையாது…
நாளுக்கும் பொழுதுக்கும் சிறகுகள் விரிந்திடும்…
கவலைகள் இனி ஏது…

Notes : Maanukkum Meenukkum Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Gangai Amaran. மானுக்கும் மீனுக்கும் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading