| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பிறைசூடன் | மனோ | இளையராஜா | மை டியர் மார்த்தாண்டன் |
Oh Alagu Nilavu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…
ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே… ஓ…
—BGM—
ஆண் : இமைகள் மூடும் கண்களாய் நான் வாழ்கிறேன்…
இதயம் கூட பாரமாய் நான் மூழ்கினேன்…
இலைகள் மூடும் கனிகள்தான் என் ஆசையே…
இலக்கணம் தான் இணைந்திடா குயிலோசையே…
ஆண் : நீர் மேல் அழகிய கோலம்…
போட்டேன் தினம் தினம் நானும்…
நினைத்தால் இனிமைதான் நடந்தால் அருமைதான்…
நினைவே நினைவிலே விழியிலே எழுதடி…
ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…
ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே… ஓ…
—BGM—
ஆண் : விதைப்பதும் அது முளைப்பதும்…
யார் சொல்லித்தான்…
முளைப்பதும் அது விளைவதும்…
யார் கையில்தான்…
ஆண் : மலர்வதும் அது மணப்பதும்…
யார் பார்த்துதான்…
மணப்பதும் அது நிலைப்பதும்…
யார் கேட்டுதான்…
ஆண் : யாரோ எழுதிய பாதை…
புரிந்தால் விளங்கிடும் கீதை…
நினைவே விலகிடு நினைத்தால் விலை கொடு…
உறவே உறவிலே உருகியே எழுதடி…
ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே…
ஓ மலரும் சிரிப்பில் உறவை மறந்ததே…
என் கண்மணி பனிதுளி கண் மீதிலா…
விண் மீதிலே வலம் வரும் நீ வெண்ணிலா…
ஆண் : ஓ அழகு நிலவு சிரிக்க மறந்ததே… ஓ…
Notes : Oh Alagu Nilavu Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Piraisoodan. ஓ அழகு நிலவு பாடல் வரிகள்.
