இளவட்டம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமை டியர் மார்த்தாண்டன்

Illavattam Kai Thattum Song Lyrics in Tamil


—BGM—

பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்…
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்…

பெண் : பூப்போல் பூப்போல் பூப்பா…
பார்த்தால் போதும் பாப்பா…
பூப்போல் பூப்போல் பூப்பா…
பார்த்தால் போதும் பாப்பா…

பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…

—BGM—

ஆண் : கனவுக்குள் கண்ணுக்குள் வந்தாயோ…
மனதுக்குள் நெஞ்சுக்குள் நின்றாயோ…
உடலுக்குள் ஒட்டிக்கொள் என்றேனோ…
உதடுக்குள் முத்துக்கள் தந்தேனோ…

—BGM—

பெண் : என் போலே பெண் தேடி…
நின்றாய் நீண்ட பொழுதாய்…
நீ தந்த எண்ணங்கள்…
நெஞ்சில் ஆழம் விழுதாய்…

ஆண் : கல்யாண மாலை கையோடு கொண்டு…
வந்தால் வாசல் திறக்கும்…

பெண் : பொட்டோடு பூவும் பொன் மஞ்சள் தானும்…
தந்தால் வாழ்வு சிறக்கும்…

ஆண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை ஏட்டும் கேட்கட்டும் டும் டும்…
ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்…
ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்…

ஆண் : பூப்போல் பூப்போல் பூப்பா…
பார்த்தால் போதும் பாப்பா…
பூப்போல் பூப்போல் பூப்பா…
பார்த்தால் போதும் பாப்பா…

ஆண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…

—BGM—

பெண் : குரல் வண்ணம் கொஞ்சட்டும் கல்யாணி…
விரல் வண்ணம் கொள்ளட்டும் பொன் மேனி…
மலை வண்ணம் அள்ளட்டும் குற்றாலம்…
மணி வண்ணம் சேரட்டும் சிங்காரம்…

ஆண் : இந்நேரம் உன் பார்வை
என் மேல் பாணம் விடுமா… ஆ…
விட்டாலும் சுட்டாலும்…
பெண்ணின் நாணம் விடுமா… ஆ…

பெண் : உன்னோடு மாது ஒன்றான போது…
கண்டால் காதல் சுகம்தான்…

ஆண் : ஒன்றான போது ரெண்டாவதேது…
இன்பம் நூறு யுகம்தான்…

பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்…
ஆண் : திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…
பெண் : ஒரு சொந்தம் புது பந்தம் மலரட்டும் டும்…
ஆண் : ஒரு சொர்க்கம் அதில் இன்பம் தொடரட்டும் டும்…

பெண் : பூப்போல் பூப்போல் பூப்பா…
பார்த்தால் போதும் பாப்பா…

ஆண் & பெண் : பூப்போல் பூப்போல் பூப்பா…
பார்த்தால் போதும் பாப்பா…

பெண் : இளவட்டம் கை தட்டும் டும் டும்…
திசை எட்டும் கேட்கட்டும் டும் டும்…


Notes : Illavattam Kai Thattum Song Lyrics in Tamil. This Song from My Dear Marthandan (1990). Song Lyrics penned by Vaali. இளவட்டம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading