கொம்புகள் இல்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ராஇளையராஜாபார்வதி என்னை பாரடி

Kombugal Illa Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
யார் இங்க சாரு…

பெண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
யார் இங்க சாரு…

பெண் : மன்னனா கண்ணனா…
குழு : ஹேய் ஹேய்…
பெண் : மன்மதனின் அண்ணனா…
குழு : ஹேய் ஹேய்…

பெண் : கம்பனா கொம்பனா…
குழு : ஹேய் ஹேய்…
பெண் : சொல்லவா ஒண்ணொண்ணா…
குழு : ஹேய் ஹேய்…

பெண் : என்னையா என்ன உன் சங்கதி…
சூரப் பரம்பர தானா ஹையே…

குழு : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
யார் இங்க சாரு…

குழு : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
யார் இங்க சாரு…

—BGM—

பெண் : பொண்ணத்தான் கண்ணால் பார்க்க…
தன்னால் கர்ப்பம் உண்டாச்சு…
உள்ளம்தான் சொன்னால் கேக்க…
நில்லாமத்தான் போயாச்சு…

குழு : பொண்ணத்தான் கண்ணால் பார்க்க…
தன்னால் கர்ப்பம் உண்டாச்சு…
உள்ளம்தான் சொன்னால் கேக்க…
நில்லாமத்தான் போயாச்சு…

பெண் : ஹே கண்ணம்மா பொன்னாத்தா…
காத்திருக்கும் கண்ணாத்தா…
திங்கிறா மண்ணும்தான்…
சேதி அது உன்னால்தான்…

பெண் : கண்ணால கட்டி இழுக்க…
கன்னியர் எல்லாம் தொட்டு இழுக்க…
உள்ளத தத்துக் குடுக்க…
உண்மைகள் எல்லாம் சுத்தி மறைச்ச…
கன்னி நான் சொன்னது எல்லாம்…
சத்தியம் சத்தியம் சாமி… ஓ ஹோய்…

ஆண் : தந்தின தின்னானே தின்னானே…
தந்தின தந்தின தந்தின தந்தின தின்னானே…

—BGM—

ஆண் : தந்தின தின்னானே தின்னானே…
தந்தின தந்தின தந்தின தந்தின தின்னானே…
ஏஹேய் ஏஹேய் ஏஹேய் ஏஹேய்…

—BGM—

ஆண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

ஆண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

ஆண் : என்னடி பட்டம்மா…
கட்டிபோட திட்டம்மா…
சொல்லடி ராக்காம…
கொள்ளைகார கூட்டம்மா…
என்னம்மா என்ன உன் சங்கதி…
எங்கிட்ட போட்டியும் ஏம்மா ஏம்மா…

ஆண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

ஆண் : ஹோய்… கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

—BGM—

ஆண் : ஏழைகள சும்மா நீயும்…
எளப்பமாக நினைக்காதே…
ஏளனம் செஞ்சா நாளை…
உனக்கும் திரும்பும் மறக்காதே…

ஆண் : கோழையப் போல எண்ணி…
குறும்பு வார்த்த பேசாதே…
கொழுப்புல சேந்த பணத்த…
குப்ப மேட்டில் வீசாதே…

ஆண் : புத்தி இல்ல அங்கேதான்…
சக்தி உண்டு இங்கேதான்…
எங்க சனம் எல்லாமே…
உங்க கதை அம்போதான்…

ஆண் : பட்டுல மின்னுற பொண்ணு…
உச்சந்தலைக்குள் உள்ளது மண்ணு…
தப்பத்தான் விட்டுடு கண்ணு…
நல்லத மட்டும் எண்ணடி நின்னு…
துள்ளுற மாட்டுக்கு கயிறு…
மாட்டுறேன் ஓட்டுறேன் பாரு… ஹோய்…

ஆண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

ஆண் : ஹா கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

ஆண் : என்னடி பட்டம்மா…
கட்டிபோட திட்டம்மா… ஹஹஹா…
சொல்லடி ராக்காமா…
கொள்ளைகார கூட்டம்மா…
என்னம்மா என்ன உன் சங்கதி…
எங்கிட்ட போட்டியும் ஏம்மா ஏம்மா…

ஆண் : கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

ஆண் : அட கொம்புகள் இல்லா காளையப் பாரு…
வம்பு இழுக்கும் வேலையப் பாரு…
வேடிக்கை பாரு…

—BGM—


Notes : Kombugal Illa Song Lyrics in Tamil. This Song from Parvathi Ennai Paradi (1993). Song Lyrics penned by Piraisoodan. கொம்புகள் இல்லா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading