லோலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிமரியா கவிதா தாமஸ்சாம்.சி.எஸ்புரியாத புதிர்

Lola Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஹா யாவும் யாவுமே நான்தானே…
காட்சி பூக்களும் நான்தானே…
ஆட்சி செய்வது நான்தானே… லோலா…

பெண் : மீசை பொம்மைகள் இங்குண்டு…
ஆசை நூலிலே கட்டுண்டு…
ஆட்டி வைப்பதே நான்தானே… லோலா…

பெண் : தேள் ஊரும் நான் பார்க்கும் பாகத்தில்…
தேன் ஊரும் நான் பேசும் நேரத்தில்…
தீ மூழும் நான் தீண்டும் தேகத்தில்…
வான் மண்ணை நாம் ஆள்வோம் வா லோலா…

—BGM—

பெண் : ஆண் எழுதிய காமம் எல்லாம்…
நாம் மாற்றியே எழுதிட வேண்டும்…
வா வா வா லோலா…

பெண் : மான் மயிலென்ன பாடல் சொல்லும்…
ஆண் கவிகளை திருத்திட வேண்டும்…
வா வா லோலா…

பெண் : கல்வி அதில் நாம்தான் மேலே…
கலவி போரில் நாம் மேலே…
கடவுள் போலே ஆவோமே வா லோலா…

பெண் : சமைக்க இனி ஆண்கள் போதும்…
காதல் கூலி குடு நீ போதும்…
கூண்டை விட்டு நாம் போவோம் வா லோலா…

—BGM—

பெண் : மடி கணினிகள் என நாம் என்னும்…
குடி மகன்களை இடித்திட வேண்டும்…
வா வா லோலா…

பெண் : அனுமதி இன்றி நம்மை தீண்டும்…
ஒரு புகழை அறுத்திட வேண்டும்…
வா வா லோலா…

பெண் : மடமை என்னும் சொல்லும் இல்லை…
அடிமை என்னும் சொல்லும் இல்லை…
நாம் செல்ல எல்லைகள் இல்லை வா லோலா…

பெண் : மங்கள்யான் போலே பாயும்…
எங்கள் எண்ணம் விண்ணை முட்டும்…
பூமி மொத்தமும் கை தட்டும் வா லோலா…

—BGM—


Notes : Lola Song Lyrics in Tamil. This Song from Puriyatha Puthir (2017). Song Lyrics penned by Madhan Karky. லோலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading