லைப்பே ஜாலிதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாதேவி ஸ்ரீ பிரசாத் & ரெய்னாதேவி ஸ்ரீ பிரசாத்குட்டி

Lifey Jollyda Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… ஈஸ்டு வெஸ்டு நார்த்து சவுத்து…
எங்கும் எங்கள் யூத்து கூத்து…
வாஸ்து பாத்து வாழாதே…
லைப்பே ஜாலிதான்…

ஆண் : ஹே ஹாட்டு கோல்டு ஸ்வீட்டு சால்டு…
எதுவேனாலும் பாரு டேஸ்டு…
திட்டம் போட்டு வாழாதே…
லைப்பே ஜாலிதான்…

ஆண் : ஹே… எக்சாமினேசன் அடிக்கடி டியுசன்…
இல்லாம போனா ஜாலிதான்…
திட்டாத டாடி தித்திக்கும் ஜோடி…
இருந்தா ஜாலிதான்…
ஹே… கைகள ரெக்கையா மாத்து ஜாலிதான்…

ஆண் : குழந்தையின் பாஷை புரிஞ்சா ஜாலிதான்…
அட ஜாலிதான்…
குடை இருந்தாலும் நனைஞ்சா ஜாலிதான்…
ஜாலிதான்…

ஆண் : அடிக்கடி மனச தொறந்தா ஜாலிதான்…
அட ஜாலிதான்…
மனசுக்கு புடிச்சத ரசிச்சா ஜாலிதான்…
ஜாலிதான்…

—BGM—

குழு : இப் யூ கீப் ஸ்மைலிங்…
யு வில் பி ஹேப்பி…
இப் யூ டோன்ட் ஸ்மைல்…
யூ வில் கெட் பிபி…
ஓபன் யுவர் ஹார்ட்…
அண்ட் லுக் அட் திஸ் வேர்ல்ட்…
லைப்பே ஜாலிதான்…

ஆண் : அரும்பாக மீசை வரும்போது…
விரலால மெல்ல தொடும்போது…
மனதோடு தோன்றும் சந்தோசம்…
ஜாலிதான்…

ஆண் : மிளகாய போல பேசாம…
மெதுவாக அன்பாக நீ பேசு…
கொலைகாரன்கூட கொழந்தைட…
ஜாலிதான்…

ஆண் : கராத்தே குங்பு தெரிகிறபோதும்…
நண்பனிடம் தோத்தா ஜாலிதான்…
அலாரம் வைத்து விடியலில் எழுந்து தூங்கு…
ஜாலிதான்…

ஆண் : ஹே… தூரலில் ஜன்னலின் ஓரம் ஜாலிதான்…
எமனிடம் ஜோக்கு அடிச்சா ஜாலிதான்…
அட ஜாலிதான்…
எரிமலையில் குளிர் காஞ்சா ஜாலிதான்…
ஜாலிதான்…

ஆண் : இளமைய முழுசா ரசிச்சா ஜாலிதான்…
அட ஜாலிதான்…
முதுமைய மனசுல மதிச்சா ஜாலிதான்…
ஜாலிதான்…

ஆண் : ஹே ஈஸ்டு வெஸ்டு நார்த்து சவுத்து…
எங்கும் எங்கள் யூத்து கூத்து…
வாஸ்து பாத்து வாழாதே…
லைப்பே ஜாலிதான்…

—BGM—

ஆண் : பல நூறு ஆண்டு முன்னால…
உன் வீடும் தெருவும் உனதில்ல…
புரிந்தாலே வாழ்வு எப்போதும் ஜாலிதான்…

ஆண் : பல நூறு பேர வென்றாலும்…
அது வீரம் என்று ஆகாது…
மனதார மன்னிக்கும் வீரம் ஜாலிதான்…

ஆண் : பொறாமை கோபம் இல்லாம வாழ…
உன்னால முடிஞ்சா ஜாலிதான்…
எல்லோரும் போல வாழாம…
புதுசா இருந்தா ஜாலிதான்…
ஹே… லட்சியம் ஆகிற கனவு ஜாலிதான்…

ஆண் : ஜெயிக்கிறபோது அழுகை ஜாலிதான்…
அட ஜாலிதான்…
தோல்விய கண்டு சிரிச்சா ஜாலிதான்…
தான் தான் தான் ஜாலிதான்…

ஆண் : அடுத்தவன் தாகம் புரிஞ்சா ஜாலிதான்…
அட ஜாலிதான்…
அடிக்க வந்தவன அணைச்சா ஜாலிதான்…
ஜாலிதான்…

—BGM—

குழு : இப் யூ கீப் ஸ்மைலிங்…
யு வில் பி ஹேப்பி…
இப் யூ டோன்ட் ஸ்மைல்…
யூ வில் கெட் பிபி…
ஓபன் யுவர் ஹார்ட்…
அண்ட் லுக் அட் திஸ் வேர்ல்ட்
லைப்பே ஜாலிதான்…


Notes : Lifey Jollyda Song Lyrics in Tamil. This Song from Kutty (2010). Song Lyrics penned by Viveka. லைப்பே ஜாலிதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading