யாரோ என் நெஞ்சை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசாகர் & சுமங்காதேவி ஸ்ரீ பிரசாத்குட்டி

Yaaro En Nenjai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாரோ என் நெஞ்சை தீண்டியது…
ஒரு விரலாலே…
தூங்கும் என் உயிரை தூண்டியது…

ஆண் : யாரோ என் கனவில் பேசியது…
இரு விழியாலே…
வாசம் வரும் பூக்கள் வீசியது…

ஆண் : தூரத்தில் நீ வந்தால்…
என் நெஞ்சில் பூகம்பம்…
மேகங்கள் இல்லாமல்… மழை
சாரல் ஆரம்பம்…

ஆண் : முதலும் ஒரு முடிவும்…
என் வாழ்வில் நீதானே…

ஆண் : நிலவாக உன்னை வானில் பார்த்தேன்…
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்…
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே…

ஆண் : மானாக உன்னை மலையில் பார்த்தேன்…
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்…
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே…

—BGM—

ஆண் : ஹோ… பேச சொல்கிறேன் உன்னை…
நீ ஏசி செல்கிறாய் என்னை…
வீணை தன்னையே மீட்டிக் கொண்டதாய்…
எண்ணி கொள்கிறேன் அன்பே…

ஆண் : காலம் என்பது மாறும்…
வலி தந்த காயங்கள் ஆறும்…

ஆண் : மேற்கு சூரியன் மீண்டும் காலையில்…
கிழக்கில் தோன்றி தான் தீரும்…

ஆண் : நதியோடு போகின்ற…
படகு என்றால் ஆடாதா…
ஆனாலும் அழகாக…
கரை சென்று சேராதா…

ஆண் : உயிரே என் உயிரே…
ஒரு வாய்ப்பை தருவாயா…

ஆண் : நிலவாக உன்னை வானில் பார்த்தேன்…
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்…
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே…

ஆண் : மானாக உன்னை மலையில் பார்த்தேன்…
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்…
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே…

—BGM—

ஆண் : ஹோ… பாதி கண்களால் தூங்கி…
என் மீதி கண்களால் ஏங்கி…
எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே…
கொண்டு சேர்க்கிறேன் தாங்கி…
நேசம் என்பது போதை…

ஆண் : ஒரு தூக்கம் தாக்கிடும் பாதை…
என்ற போதிலும்…
அந்த துன்பத்தை ஏற்று கொள்பவன் மேதை…

ஆண் : உன்னோடு நான் வாழும்…
இந்நேரம் போதாதா…
எந்நாளும் மறவாத…
நாளாகி போகாதா…

ஆண் : இன்றே இறந்தாலும்…
அது இன்பம் ஆகாதா…

ஆண் : நிலவாக உன்னை வானில் பார்த்தேன்…
அலையாக உன்னை கடலில் பார்த்தேன்…
சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே…

ஆண் : மானாக உன்னை மலையில் பார்த்தேன்…
தேனாக உன்னை மலரில் பார்த்தேன்…
மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே…

—BGM—


Notes : Yaaro En Nenjai Song Lyrics in Tamil. This Song from Kutty (2010). Song Lyrics penned by Thamarai. யாரோ என் நெஞ்சை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading