குத்தீட்டி கண்ணுல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசத்ய பிரகாஷ்சி. சத்யாவேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்

Kutheeti Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…
குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…

ஆண் : நீ பார்வையால என்ன ஏன்டி பங்கு போடுற…
சொல்லும் வார்த்தையால நெஞ்சுக்குள்ள சங்கு ஊதுற…

ஆண் : நான் உன்னப் பாக்கலேனா சாதா ஆளுடி…
உன் பார்வை பட்டதாலே தாதா தானடி…
நான் தாதா தானடி…

ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…

—BGM—

ஆண் : பொழுதும் நினைப்புல நீ புரட்டி எடுக்குற…
பதுங்கும் மனசையும்தான் விரட்டி புடிக்குற…
சீக்காளி போல என்ன சிரிப்பால சாய்க்குற…
மக்கானா கூட நீதான் மாமேதை ஆக்குற…

ஆண் : சோழியாக நீ என்ன அள்ளி வீசி ஏன் போற…
சாம்புராணி புகையாக சுத்தி சுத்தி ஏன் வாற…

ஆண் : பாக்காத பாக்காத இப்படி…
உன்ன பாத்து நான் தூங்குவது எப்படி…

ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…

ஆண் : மாத்துற மாத்துற…
என்ன மாத்துற…
மாத்துற மாத்துற…
என்ன மாத்துற… ஹோய்…

—BGM—

ஆண் : அளவா சினுங்கி என்ன அழுத்தி மிதிக்குற…
அழகா நெருங்கி வந்து கழுத்த நொிக்கிற…
கழுத்த நொிக்கிற…

ஆண் : மாத்தோப்பு காத்து போல மனசோட வீசுற…
மாராப்பு சேலையால மருதாணி பூசுற…

ஆண் : கால நேரம் பாராம சொல்லுரேனே உன் பேர…
கூடிப் பேச எண்ணாம செய்வதென்ன கோளாற…

ஆண் : தாக்காத தாக்காத இப்படி…
உன்னத் தாண்டி நான் வாழ்வது எப்படி…

ஆண் : குத்தீட்டி கண்ணுல குருகுருன்னு பாக்குற…
சப்பாத்திக் கள்ளிய சம்பாங்கியா மாத்துற…


Notes : Kutheeti Song Lyrics in Tamil. This Song from Velainu Vandhutta Vellaikaaran (2016). Song Lyrics penned by Yugabharathi. குத்தீட்டி கண்ணுல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading