குறை ஒன்றும் இல்லை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownஎம்.எஸ்.சுப்புலட்சுமிராஜாஜிகிருஷ்ணன் பாடல்கள்

Kurai Ondrum Illai Song Lyrics in Tamil


BGM

பெண் : குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…
குறை ஒன்றும் இல்லை கண்ணா…
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா…

பெண் : குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…
குறை ஒன்றும் இல்லை கண்ணா…
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா…

பெண் : கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா…
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு…
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…

பெண் : வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க…
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா…
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…

BGM

பெண் : திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா…
கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா…
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்…

பெண் : திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா…
உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்…
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா…
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா…

பெண் : குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா…
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா…
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…

பெண் : குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…

BGM

பெண் : கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி…
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா…
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி…
நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா…

பெண் : குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…
யாதும் மறுக்காத மலையப்பா…
யாதும் மறுக்காத மலையப்பா…
உன் மார்பில் ஏதும் தர நிற்கும்…
கருணைக் கடல் அன்னை…
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு…
என்றும் இருந்திட ஏது குறை எனக்கு…
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா…
ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா…
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா…
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா…


Notes : Kurai Ondrum Illai Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Unknown. குறை ஒன்றும் இல்லை பாடல் வரிகள்.


Scroll to Top