என்னுயிரே என்னுயிரே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & சுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்உயிரே

Ennuyire Ennuyire Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே…
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே…

—BGM—

ஆண் : கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே…
என் ஓருயிரே…
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை…
இது எந்த நிலை என்று தோன்றவில்லை…
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை…
என் ஆருயிரே…
என் ஓருயிரே…

ஆண் : வந்து சேர்ந்து விடு…
என்னை சேர விடு…
இல்லை சாக விடு…

பெண் : சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய் விடினும்…
நம் காதலிலே வரும் ஜோதியிலே…
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்…
காதலர் கண்களே சந்திரன் சூரியன் ஆகாதோ…

ஆண் : கைகள் நான்கும் தீண்டும் முன்னே…
கண்கள் நான்கும் தீண்டிடுமே…
மோகம் கொஞ்சம் முளைவிடுமே…
கண் பார்வை முதல் நிலையே…

ஆண் : ஆருயிரே என்னுயிரே…
உள்ளம் கொண்டது ஓர் மயக்கம்…
என்னுயிரே காதலில்…
இரண்டாம் நிலைதான் பால் மயக்கம்…

ஆண் : மெய் தீண்டும் நேசம் தொடங்கியதோ…
இது காதலின் மூன்றாம் படி நிலையோ…
என் உடல் வழி அமிர்தம் வழிகிறதோ…
என் உயிர் மட்டும் புது வித வழி கண்டதோ…

—BGM—

ஆண் : என்னுயிரே என்னுயிரே…
உன்னை கொஞ்சம் தீண்டுவேன்…
ஏழ்வகை காதலை எப்போதிங்கே தாண்டுவேன்…

ஆண் : இதில் நான்காம் நிலையை அறிந்துவிட்டேன்…
என் நருமலரே உன்னை தொழுதுவிட்டேன்…
என் சுய நிலை என்பதை இழந்துவிட்டேன்…
அந்த சூரியன் எழும் திசை மறந்துவிட்டேன்…

—BGM—

ஆண் : கண்கள் தாண்டி போகாதே என் ஆருயிரே…
என் ஓருயிரே…
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை…
நாம் இது வரை கண்டது நான்கு நிலை…
இனி என்ன நிலை என்று தோன்றவில்லை…
என் ஆருயிரே…

—BGM—

ஆண் : என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்…
என் உயிரை உனக்குள் ஊற்றிவிட்டேன்…
இதுதான் காதலின் ஐந்து நிலை…
நான் உன் கையில் நீா்த்திவலை…

ஆண் : என் உடல் பொருள் தந்தேன் சரண் புகுந்தேன்…
என் உயிரை உனக்குள் ஊற்றிவிட்டேன்…
இதுதான் காதலின் ஐந்து நிலை…
நான் உன் கையில் நீா்த்திவலை…

ஆண் : ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை…
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை…

—BGM—

ஆண் : ஒரு மோகத்தினால் வரும் பித்து நிலை…
இது மோசமில்லை ஒரு முக்தி நிலை…
நம் காதலிலே இது ஆறு நிலை…

—BGM—

ஆண் : என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே…
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே…

—BGM—

பெண் : சூரியன் சந்திரன் வீழ்ந்தழிந்து போய் விடினும்…
நம் காதலிலே வரும் ஜோதியிலே…
இந்த பூமியிலே ஒளி கூட்டிடுவோம்…
காதலர் கண்களே சந்திரன் சூரியன் ஆகாதோ…


Notes : Ennuyire Ennuyire Song Lyrics in Tamil. This Song from Uyire (1998). Song Lyrics penned by Vairamuthu. என்னுயிரே என்னுயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading