கோயில் சிலையே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிநிவாஸ்விஜய் ஆண்டனிபிச்சைக்காரன் 2

Koyil Silaye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கோயில் சிலையே…
என் தாயின் நகலே…
உன் அண்ணன் இல்லை அம்மா நானே…

ஆண் : தோகை மயிலே…
என் வாழ்வின் பொருளே…
உன் அண்ணன் இல்லை அம்மா நானே…

ஆண் : உயிரே போகும் நொடியும்…
அன்பை தருவேன் நான்தானே…
உலகே மயிராய் தெரியும்…
உந்தன் மடியில் பொன்மானே…

ஆண் : கோயில் சிலையே…
என் தாயின் நகலே…
உன் அண்ணன் இல்லை அம்மா நானே…

—BGM—

ஆண் : தெருவிலே வாழ்க்கை வாழ்ந்தாலும்…
உன்னை தேரிலே வைப்பேனே கண்ணே…
கடவுளே வந்து சொன்னாலும்…
உன்னை பிரியமாட்டேன் பெண்ணே…

ஆண் : மூச்சு நின்று போனாலும்…
ஆவியாக நான் வருவேன்…
உலகின் மொத்த அன்பெல்லாம் உனக்கு காட்டுவேன்…
இனியோர் பிறவி எடுத்தாலும் உனக்கு தாயாக மாறுவேன்…

—BGM—

ஆண் : அழுதிடும் உன்னை நான் கண்டால்…
எனக்குள் தாய்ப்பாலே சுரக்கும்…
என் விரலினை பிடித்து வந்தால்…
சொர்க்கம் மண் மீது பிறக்கும்…

ஆண் : வேண்டுமென்று நீ கேட்டால் உயிரை மீட்டுவேன்…
உன்னை பூமி உடைந்துபோனால் கையில் தாங்குவேன்…
இனியோர் பிறவி எடுத்தாலும் உனக்கு தாயாக மாறுவேன்…

ஆண் : கோயில் சிலையே…
என் தாயின் நகலே…
உன் அண்ணன் இல்லை அம்மா நானே…


Notes : Koyil Silaye Song Lyrics in Tamil. This Song from Pichaikkaran 2 (2023). Song Lyrics penned by Arun Bharathi. கோயில் சிலையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading