கொட்டுங்கடி கும்மி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாசூரியன்

Kottungadi Kummi Song Lyrics in Tamil


BGM

பெண் : கொட்டுங்கடி கும்மி…
கொல்லிமலை கும்மி…
காலில் கொத்து சரபடி சத்தமிடவே…
கொட்டுங்கடி கும்மி…

குழு : கொட்டுங்கடி கும்மி…
கொல்லிமலை கும்மி…
காலில் கொத்து சரபடி சத்தமிடவே…
கொட்டுங்கடி கும்மி…

பெண் : தாழங்குடை போல் நடக்கும்…
தாமரைப்பூ தாயானா…
தன் மடியில் தேன் சுமக்கும்…
குறிஞ்சி மலர் போலானா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : குங்குமம் பொங்கிடும் மங்கள மங்கையரே…
உங்க கை வளைக் கொஞ்சிட…

குழு : கொட்டுங்கடி கும்மி…
கொல்லிமலை கும்மி…
காலில் கொத்து சரபடி சத்தமிடவே…
கொட்டுங்கடி கும்மி…

BGM

பெண் : அரைச்சு வச்ச சந்தனத்த…
எடுத்துப் பூசுங்க…
மயில் இறகினாலே வேர்த்திடாம…
விசிறி வீசுங்க…

குழு : தொடுத்து வச்ச பாசி மாலை…
கழுத்தில் மாட்டுங்க…
வாழைத் தண்டு போல இருக்கும் கையில்…
வளையல் பூட்டுங்க…

ஆண் : கட்டழகும் எட்டழகும்…
கண்ணு படும் கண்டாலே…
கன்னத்துல திருஷ்டி பொட்டு…
வைக்க வேணும் முன்னால…

குழு : இவ மூக்கும் முழியும் பார்க்க பார்க்க…
மின்னும் ஆனிப் பொன்போலே…

பெண் : கொட்டுங்கடி கும்மி…
கொல்லிமலை கும்மி…
காலில் கொத்து சரபடி சத்தமிடவே…
கொட்டுங்கடி கும்மி…

BGM

பெண் : சிவப்புக் கல்லு மாணிக்கம் போல்…
புள்ளப் பொறக்கணும்…
அது சூரியகாந்தி பூவைப் போல…
மெல்ல சிரிக்கணும்…

குழு : பொறந்தப் புள்ள அருவிப் போல…
தாவிக் குதிக்கணும்…
இவ புடவத் தனத்தில் மூடிக்கிட்டு…
பாலும் குடுக்கணும்…

ஆண் : தங்கக் கட்டி வயித்தில் வந்த…
தலைச்சன் பிள்ளே எந்நாளும்…
சிங்கக் குட்டி போல் நடந்து…
போடும் இங்கு கும்மாளம்…

குழு : அடி ஆக மொத்தம் நமக்கு நித்தம்…
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்…

பெண் : கொட்டுங்கடி கும்மி…
கொல்லிமல கும்மி…
காலில் கொத்து சரபடி சத்தமிடவே…
கொட்டுங்கடி கும்மி…

குழு : கொட்டுங்கடி கும்மி…
கொல்லிமலை கும்மி…
காலில் கொத்து சரபடி சத்தமிடவே…
கொட்டுங்கடி கும்மி…


Notes : Kottungadi Kummi Song Lyrics in Tamil. This Song from Suriyan (1992). Song Lyrics penned by Vaali. கொட்டுங்கடி கும்மி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading