கொஞ்சம் நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுபமா & சுரேஷ் பீட்டர்ஸ்ஏ.ஆர்.ரகுமான்திருடா திருடா

Konjam Nilavu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு…
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்…
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்…
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்…
கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்…
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்…

பெண் : சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…
சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…

பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு…
ஒன்றாக சேர்த்தால் எந்தன் தேகம்…

—BGM—

பெண் : என் கனவில் எவனோ ஒருவன்…
என் இரவில் ஒளியாய் தெரிவான்…
வான் மழை போல் உயிரில் உயிரில் விழுவான்…
தினம் நான் விரும்பும் வகையில் வந்து பொழிவான்…

பெண் : தேன் இதழை இவள் தந்து மாயாது…
இனி பார்கடலில் அலை என்றும் ஓயாது…

பெண் : வந்து நான் மண்ணிலே…
ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வாராது…
இங்கு நீ இருந்தால் ஒரு தோல்வி நேராது…

குழு : மங்கை உன் கால் பட்டால்…
மண்ணும் ஒரு மண்ணல்ல…
வெள்ளை பொன் தேகத்தில்…
வேர்வைத் துளி உப்பல்ல…

குழு : செந்தாழம் பூவுக்கு…
முள்ளொன்றும் குறையல்ல…
உள்ளொன்று வைத்தாலும்…
உன்மீது பிழையல்ல…

பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு…
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்…
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்…
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்…

பெண் : கொஞ்சம் மிருகம்…
குழு : கொஞ்சம் மிருகம்…
பெண் : கொஞ்சம் கடவுள்…
குழு : கொஞ்சம் கடவுள்…
பெண் : ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்…

பெண் : சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…
சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…

—BGM—

குழு : பெண்ணே உன் கண்ணாளன்…
பிறையேறி வருவானே…
விண்கொண்ட மீனெல்லாம்…
விளையாட தருவானே…

—BGM—

பெண் : கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு…
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்…
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்…
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்…

பெண் : கொஞ்சம் மிருகம்…
குழு : கொஞ்சம் மிருகம்…
பெண் : கொஞ்சம் கடவுள்…
குழு : கொஞ்சம் கடவுள்…
பெண் : ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் நெஞ்சம்…

பெண் : சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…
சந்திரலேகா… ஆஆ… சந்திரலேகா…

—BGM—


Notes : Konjam Nilavu Song Lyrics in Tamil. This Song from Thiruda Thiruda (1993). Song Lyrics penned by Vairamuthu. கொஞ்சம் நிலவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading