கொல்லி மலைச் சாரலிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாஇளையராஜாஎங்க முதலாளி

Kolli Malai Saaralile Song Lyrics in Tamil


BGM

ஆண் : கொல்லி மலைச் சாரலிலே…
கூதல் காத்து வீசையிலே…
அடடா சுகமே…
அணைச்சா வருமே… ஏஏஏ…

பெண் : கொல்லி மலைச் சாரலிலே…
கூதல் காத்து வீசையிலே…

BGM

பெண் : தேனாடும் இடை நூலாச்சு…
நான் தூங்கி பல நாளாச்சு…

ஆண் : கனவாலே உடல் கனலாச்சு…
உறவாலே மனம் கனிஞ்சாச்சு…

பெண் : காணாத ஆனந்தம் நாம் காணவே…
ஆண் : காலங்கள் வந்தாச்சு நாம் சேரவே…

பெண் : நெனச்சா இனிக்கும்…
ஆண் : இளமை துடிக்கும்… ஹ்ம்ம்… ம்ம்…

பெண் : கொல்லி மலைச் சாரலிலே…
கூதல் காத்து வீசையிலே…
அடடா சுகமே…
அணைச்சா வருமே…

ஆண் : கொல்லி மலைச் சாரலிலே…
கூதல் காத்து வீசையிலே…

BGM

ஆண் : பார்த்தேனே ஒரு தேன் கூடு…
பாய்ந்தோடும் சுகம் மனதோடு…

பெண் : சீராட்டு என்னை பாராட்டு…
புதிதாய் நீ ஒரு தேரோட்டு…

ஆண் : பூஞ்சோலை வருகின்ற பூங்காற்று நீ…
பெண் : பூவுக்கு சுவை சேரும் புது வண்டு நீ…

ஆண் : இதுதான் சுகமே…
பெண் : அதுதான் இனிமை…

ஆண் : கொல்லி மலைச் சாரலிலே…
கூதல் காத்து வீசையிலே…

பெண் : அடடா சுகமே…
ஆண் : அணைச்சா வருமே…

பெண் : கொல்லி மலைச் சாரலிலே…
ஆண் : கூதல் காத்து வீசையிலே…


Notes : Kolli Malai Saaralile Song Lyrics in Tamil. This Song from Enga Muthalali (1993). Song Lyrics penned by Vaali. கொல்லி மலைச் சாரலிலே பாடல் வரிகள்.


Scroll to Top