கிலேச காதலாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன்ராஜன்ஜனனி, மாளவி சுதரேசன் & கல்யாண் மஞ்சுநாத்ஜென் மார்ட்டின்டாடா

Klesa Kadhala Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கிலேச காதலாய் உன்னை ஏற்கிறேன்…
நீ அருகினில் இருக்கையில் ஒரு இறகென மிதக்கிறேன்…
அதித காதலால் என்னை மறக்கிறேன்…
நீ விரல்களை பிடிக்கையில் என் துயரங்களை தொலைக்கிறேன்…

பெண் : சேய் போல் என்னை மாற்றினாயே…
என் தாய் போல் நீயும் மாறினாயே…

பெண் : உன் பார்வை போதும்…
உன் வார்த்தை போதும்…
என் வாழ்க்கையும் யாவும்…
உன் மூச்சில் உயிர் வாழுமே…

ஆண் : உன் வாழ்வு என்னோடு…
என் வாழ்வு உன்னோடு…
வேறொன்றும் இனிமேலே வேண்டாம் பெண்ணே…

ஆண் : கை தாங்கும் அன்போடு…
தோள் சாயும் நெஞ்சோடு…
நீங்காமல் சேர்ந்தாலே போதும் கண்ணே…

—BGM—

பெண் : உன் நிழல்படும் தொலைவினில் தினம்…
வசிப்பது பேரின்பம்…
சில நொடி சினம் சிரிக்கையில் மனம்…
உணர்ந்திடும் முன் ஜென்மம்…

பெண் : அணைப்பாயா என் சொல் கேட்பாயா…
என் ராட்சசா என் செல்விசா… வரம் நீயே…

பெண் : அன்பில் சிந்தும் கண்ணிர் போல வைரம் இல்லை…
உன் அருகினில் வாழ்ந்தால் நகரம் கூட துயரம் இல்லை…

ஆண் : உன் வாழ்வு என்னோடு…
என் வாழ்வு உன்னோடு…
வேறொன்றும் இனிமேலே வேண்டாம் பெண்ணே…

ஆண் : கை தாங்கும் அன்போடு…
தோள் சாயும் நெஞ்சோடு…
நீங்காமல் சேர்ந்தாலே போதும் கண்ணே…

—BGM—


Notes : Klesa Kadhala Song Lyrics in Tamil. This Song from Dada (2023). Song Lyrics penned by Mohanrajan. கிலேச காதலாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading