கற்பூர நாயகியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அவிநாசிமணிL.R. ஈஸ்வரிகண்மணிராஜாஅம்மன் பாடல்கள்

Karpoora Nayagiye Song Lyrics in Tamil


பெண் : லிங்கேஸ்வர பூஜித்த வாகினி…
சுசீந்திர சர்வ மதான்கினி…
கலபகஸ்தூரி சுகந்த சுந்தரி…
சர்வஜன சங்கரி சர்வேஸ்வரி…
சர்வஜன சங்கரி சர்வேஸ்வரி…

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…

BGM

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா…
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா…
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா… ஆ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…

—BGM—

பெண் : விற்கால வேதவள்ளி விசாலாட்சி…
விழிக்கோல மாமதுரை மீனாட்சி…
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே…
சுடராக வாழ்விப்பாய் எம்மை நீயே…

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…

BGM

பெண் : புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி…
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி…
நவநவமாய் வடிவாகும் மகேஸ்வரி…
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி…

பெண் : கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி…
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி…
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி…
உன்னடிமைச் சிறியவளை நீ ஆதரி…

BGM

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…

பெண் : நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்…
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழிய வேண்டும்…
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்…
கவிதையிலே உன் நாமம் உருக வேண்டும்…

BGM

பெண் : சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்…
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்…
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா…
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா…
உன் மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா…

பெண் : அம்மா கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…

BGM

பெண் : காற்றாகி கனவாகிக் கடலாகினாய்…
கயிறாகி உயிராகி உடலாகினாய்…
காற்றாகி கனவாகிக் கடலாகினாய்…
கயிறாகி உயிராகி உடலாகினாய்…

பெண் : நேற்றாகி இன்றாகி நாளாகினாய்…
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்…
நிலமாகி பயிராகி உணவாகினாய்…
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்…
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்…

பெண் : தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்…
போற்றாத நாளில்லை தாயே உன்னை…
போற்றாத நாளில்லை தாயே உன்னை…
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை…

BGM

பெண் : கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை…
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை…
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை…
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை…

பெண் : செம்பவள வாயழகி உன்னெழிலோ…
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை…
அம்பளவு விழியாலே உன்னை என்றும்…
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை…

BGM

பெண் : அன்புக்கே நானடிமையாக வேண்டும்…
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்…
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்…
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்க வேண்டும்…

பெண் : பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்…
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்…
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்…
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்…
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்…

BGM

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா…
பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா…
பூவிருந்த வல்லி தெய்வானையம்மா… ஆ…

பெண் : கற்பூர நாயகியே கனகவள்ளி…
காளி மகமாயி கருமாரி அம்மா…
காளி மகமாயி கருமாரி அம்மா…
காளி மகமாயி கருமாரி அம்மா…


Notes : Karpoora Nayagiye Song Lyrics in Tamil. This Song from Devotional songs. Song Lyrics penned by Avinasimani. கற்பூர நாயகியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading