அமைதியான நதியினிலே ஓடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திஆண்டவன் கட்டளை

Amaithiyana Nathiyinile Song Lyrics in Tamil


BGM

ஆண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…

ஆண் : காற்றினிலும் மழையினிலும்…
கலங்க வைக்கும் இடியினிலும்…
காற்றினிலும் மழையினிலும்…
கலங்க வைக்கும் இடியினிலும்…
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…
ஹோய்… ஹோய்…

ஆண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…

BGM

ஆண் : தென்னம் இளங்கீற்றினிலே…
தென்னம் இளங்கீற்றினிலே…
தாலாட்டும் தென்றல் அது…
தென்னம் இளங்கீற்றினிலே…
தாலாட்டும் தென்றல் அது…

ஆண் : தென்னைதனைச் சாய்த்துவிடும்…
புயலாக வரும்பொழுது…
தென்னைதனைச் சாய்த்துவிடும்…
புயலாக வரும்பொழுது…

ஆண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…

BGM

ஆண் : ஆற்றங்கரை மேட்டினிலே…
ஆடி நிற்கும் நாணலது…
ஆற்றங்கரை மேட்டினிலே…
ஆடி நிற்கும் நாணலது…

ஆண் : காற்றடித்தால் சாய்வதில்லை…
கனிந்த மனம் வீழ்வதில்லை…
காற்றடித்தால் சாய்வதில்லை…
கனிந்த மனம் வீழ்வதில்லை…

ஆண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…

BGM

பெண் : நாணலிலே காலெடுத்து…
நடந்து வந்த பெண்மை இது…
நாணலிலே காலெடுத்து…
நடந்து வந்த பெண்மை இது…

பெண் : நாணம் என்னும் தென்றலிலே…
தொட்டில் கட்டும் மென்மை இது…
நாணம் என்னும் தென்றலிலே…
தொட்டில் கட்டும் மென்மை இது…

பெண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…

BGM

பெண் : அந்தியில் மயங்கி விழும்…
காலையில் தெளிந்துவிடும்…
அந்தியில் மயங்கி விழும்…
காலையில் தெளிந்துவிடும்…

பெண் : அன்பு மொழி கேட்டுவிட்டால்…
துன்ப நிலை மாறிவிடும்…
அன்பு மொழி கேட்டுவிட்டால்…
துன்ப நிலை மாறிவிடும்…

ஆண் & பெண் : அமைதியான நதியினிலே ஓடும்…
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…

ஆண் & பெண் : காற்றினிலும் மழையினிலும்…
கலங்க வைக்கும் இடியினிலும்…
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…
ஹோய்… ஹோய்…

ஆண் & பெண் : அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…


Notes : Amaithiyana Nathiyinile Song Lyrics in Tamil. This Song from Aandavan Kattalai (1964). Song Lyrics penned by Kannadasan. அமைதியான நதியினிலே ஓடும் பாடல் வரிகள்.


Scroll to Top