ஆறு மனமே ஆறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்டி.எம்.சௌந்தரராஜன்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திஆண்டவன் கட்டளை

Aaru Maname Aaru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…

ஆண் : சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு…
தெய்வத்தின் கட்டளை ஆறு…
தெய்வத்தின் கட்டளை ஆறு…

—BGM—

ஆண் : ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…

—BGM—

ஆண் : ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்…
உள்ளத்தில் உள்ளது அமைதி…
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்…
இறைவன் வகுத்த நியதி…

ஆண் : ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்…
உள்ளத்தில் உள்ளது அமைதி…
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம்…
இறைவன் வகுத்த நியதி…

ஆண் : சொல்லுக்கு செய்கை பொன்னாகும்…
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்…

—BGM—

ஆண் : சொல்லுக்கு செய்கை பொன்னாகும்…
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்…

ஆண் : இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்…
எல்லா நன்மையும் உண்டாகும்…
எல்லா நன்மையும் உண்டாகும்…

ஆண் : ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…

—BGM—

ஆண் : உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்…
உலகம் உன்னிடம் மயங்கும்…
நிலை உயரும் போது பணிவு கொண்டால்…
உயிர்கள் உன்னை வணங்கும்…

ஆண் : உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்…
உலகம் உன்னிடம் மயங்கும்…
நிலை உயரும் போது பணிவு கொண்டால்…
உயிர்கள் உன்னை வணங்கும்…

ஆண் : உண்மை என்பது அன்பாகும்…
பெரும் பணிவு என்பது பண்பாகும்…

—BGM—

ஆண் : உண்மை என்பது அன்பாகும்…
பெரும் பணிவு என்பது பண்பாகும்…

ஆண் : இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில்…
எல்லா நன்மையும் உண்டாகும்…
எல்லா நன்மையும் உண்டாகும்…

ஆண் : ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…

—BGM—

ஆண் : ஆசை கோபம் களவு கொள்பவன்…
பேசத்தெரிந்த மிருகம்…

—BGM—

ஆண் : அன்பு நன்றி கருணை கொண்டவன்…
மனித வடிவில் தெய்வம்…
இதில் மிருகம் என்பது கள்ள மனம்…
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்…

ஆண் : இந்த ஆறு கட்டளை அறிந்த மனது…
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்…
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்…

ஆண் : ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…

ஆண் : சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு…
தெய்வத்தின் கட்டளை ஆறு…
தெய்வத்தின் கட்டளை ஆறு…

ஆண் : ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…

—BGM—


Notes : Aaru Maname Aaru Song Lyrics in Tamil. This Song from Aandavan Kattalai (1964). Song Lyrics penned by Kannadasan. ஆறு மனமே ஆறு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading