காதல் வந்திருச்சு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்மலேசியா வாசுதேவன்இளையராஜாகல்யாணராமன்

Kadhal Vandhirichchu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆஹான் வந்திருச்சே…
ஆஹஹான் ஓடிவந்தேன்…

—BGM—

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை…
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…

—BGM—

ஆண் : கழுதையப் போல் உந்தன் நடையில…
அந்தக் காக்கைய போல் உந்தன் குரலில… ஆஹா… ஹாஆ…

ஆண் : கவிதையப் போல் உந்தன் நடையில…
பச்ச கிளியைப் போல் உந்தன் குரலிலே…
எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி…

—BGM—

ஆண் : எண்ணங்க மயங்கி மயங்கி மயங்கி…
அடுத்தது என்ன மறந்து போச்சே…
ஹா… ஞாபகம் வந்திருச்சு…
ஜோடி நீ சின்ன ராணி…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…

—BGM—

ஆண் : கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு…
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன…

—BGM—

ஆண் : கன்னத்தில் கொடுக்குற முத்தம் ஒன்னு…
அதை கடனா கொடுத்தா தப்பு என்ன…
சித்திரை சிறுக்கி சுத்துற பொறுக்கி…
ஐய்யய்ய யய்யயோ மறந்து போச்சே…

—BGM—

ஆண் : ஹான்… சித்திரை சிலையே…
சுத்துற நிலவே…
செங்கனி சுவையே…
சிற்றின்ப நதியே…
ஆஹா… வந்திருச்சு மோகம் நெஞ்சுக்குள்ள…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடிவந்தேன்…

—BGM—

ஆண் : கிழக்கே போகும் ரயிலிலே…
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே…

—BGM—

ஆண் : கிழக்கே போகும் ரயிலிலே…
உன் இளமை ஊஞ்சலில் ஆடுதே…
அன்னக்கிளியே பத்திரகாளி…
சிட்டுக் குருவி கவரிமானே…
வேகம் வந்திருச்சு…
வாடி நீ சின்ன ராணி…

ஆண் : காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை…
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்…

—BGM—


Notes : Kadhal Vandhirichchu Song Lyrics in Tamil. This Song from Kalyanaraman (1979). Song Lyrics penned by Panchu Arunachalam. காதல் வந்திருச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading