தெய்வம் தந்த வீடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன்அவள் ஒரு தொடர்கதை

Deivam Thandha Veedu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…

BGM

ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே…

ஆண் : வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…
வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…

BGM

ஆண் : நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா… ஆஆஆ…

—BGM—

ஆண் : நான் கேட்டு தாய் தந்தை படைத்தாரா…
இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா…
தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி…
கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி…

ஆண் : ஆதி வீடு அந்தம் காடு…
இதில் நான் என்ன…
அடியே நீ என்ன ஞானப் பெண்ணே…
வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…

ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…

BGM

ஆண் : வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்…
உன் மனம் எங்கும் தெருக்கூத்து பகல் வேஷம்…
கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி…
காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி…

ஆண் : கொண்டதென்ன கொடுப்பதென்ன…
இதில் தாய் என்ன…
மனந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே…
வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…

BGM

ஆண் : தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்…
அது தெரியாமல் போனாலே வேதாந்தம்…
மண்ணைத் தோண்டி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி…
என்னை தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி…

ஆண் : உண்மை என்ன பொய்மை என்ன…
இதில் தேன் என்ன…
கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே…
வாழ்வின் பொருள் என்ன…
நீ வந்த கதை என்ன…

ஆண் : தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…


Notes : Deivam Thandha Veedu Song Lyrics in Tamil. This Song from Aval Oru Thodharkadai (1974). Song Lyrics penned by Kannadasan. தெய்வம் தந்த வீடு பாடல் வரிகள்.


Scroll to Top