கண்ணோடு நீங்காமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தரராஜன்அக்ஷயா ஸ்ரீதர்அரோல் கோரெல்லிஇப்படிக்கு காதல்

Kannodu Neengamal Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணோடு நீங்காமல் உரையாடும் காதல் யாரோ…
கையோடு சேராமல் நொடியாவும் கானல் நீரோ…

பெண் : உன்னோடு நான் வாழும்…
இந்த காலம் ஒன்றே வேண்டும்…
உண்டு நான் என்னும்…
இந்த பாதை ஒன்றே போதும்…

பெண் : முடியாதே இந்த காதல் என்றுமே முடிவிலித்தான்…
பூவே இந்த காதலே வாழ்க்கையின் கரைத்தான்…
காணும் யாவிலும் யாவிலும் உனது அலைதான்…
நாளும் இந்த காதல் வாட்டிடுதே அருகினிலே வா…

BGM

பெண் : பேசாமல் போகும் போதும்…
உன் மௌனம் ஏதோ பேசும்…
நீருக்குள் ஈரம் போல…
என்னுள்ளே நீயும் நீயும்…

பெண் : சொல்லாத காதல் வந்து…
கொள்ளாமல் என்னை கொல்ல…
இல்லாத காட்சிக்குள்ளே அலை மோதுதே…

பெண் : புரியாத நெஞ்சம் புயல்காற்றில் போரிடுதே…
விடயாதா கொஞ்சம் என் வானம் ஏங்கிடுதே…

BGM

பெண் : கண்ணோடு நீங்காமல் உரையாடும் காதல் யாரோ…
கையோடு சேராமல் நொடியாவும் கானல் நீரோ…

பெண் : உன்னோடு நான் வாழும்…
இந்த காலம் ஒன்றே வேண்டும்…
உண்டு நான் என்னும்…
இந்த பாதை ஒன்றே போதும்…


Notes : Kannodu Neengamal Song Lyrics in Tamil. This Song from Ippadikku Kadhal (2024). Song Lyrics penned by Soundararajan. கண்ணோடு நீங்காமல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading