கண்ணில் பார்வை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஸ்ரேயா கோஷல்இளையராஜாநான் கடவுள்

Kannil Paarvai Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ணில் பார்வை போன போதும்…
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்…
கண்ணில்லாதபேரை கண்டால்…
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்…

பெண் : கனாவில் கூட இன்பம்…
வாராமல் இந்த ஜென்மம்…
ஓ தெய்வமே இது சம்மதமோ…

பெண் : கண்ணில் பார்வை போன போதும்…
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்…
கண்ணில்லாத பேரை கண்டால்…
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : யார்க்கும் போலொரு அன்னை தந்தை…
எனக்கும் இருந்தது உண்டு…
யார்க்கும் போலொரு தேகம் தாகம்…
எனக்கும் வளர்ந்தது இங்கு…

பெண் : யார்க்கும் போலே விழிகள் இருந்தும்…
உலகமோ இருளில்…
ஒளியைப்போலே ஒரு துணை…
வந்து சென்ற துன்பம் யார்க்கும் உண்டோ…

பெண் : கண்ணில் பார்வை போன போதும்…
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்…
கண்ணில்லாத பேரை கண்டால்…
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்…

BGM

பெண் : வீதியென்றொரு வீடும் உண்டு…
எனக்கது சொந்தம் என்று…
வானம் என்றொரு கூரை உண்டு…
விழிகளும் அறியாது…

பெண் : வேலியில்லா சோலைக்காக வந்ததோர் காவல்…
கண்கள் கொண்ட தெய்வமும்…
காவலன் கொண்டு சென்றதேனோ…

பெண் : கண்ணில் பார்வை போன போதும்…
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்…
கண்ணில்லாத பேரை கண்டால்…
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்…

பெண் : கனாவில் கூட இன்பம்…
வாராமல் இந்த ஜென்மம்…
ஓ தெய்வமே இது சம்மதமோ…

பெண் : கண்ணில் பார்வை போன போதும்…
கண்ணில் ஈரம் ததும்பும் ததும்பும்…
கண்ணில்லாத பேரை கண்டால்…
கனாக்கள் ஒதுங்கும் ஒதுங்கும்…


Notes : Kannil Paarvai Song Lyrics in Tamil. This Song from Naan Kadavul (2009). Song Lyrics penned by Vaali. கண்ணில் பார்வை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading