கண்ணே நவமணியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாஎன் பொம்முக்குட்டி அம்மாவுக்கு

Kanne Navamaniye Song Lyrics in Tamil


ஆண் : கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…

ஆண் : ஆயிரம் பிச்சி பூவும்…
அரும்பரும்பா பூத்தாலும்…
வாசமுள்ள பிச்சி எனக்கு…
வாய்க்காது எக்காலும்…

ஆண் : கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…

—BGM—

ஆண் : ஒன்னு ரெண்டு பெத்திருந்தா…
துக்கம் அது தோணாது…
உன்னை நானும் விட்டதனால்…
கண்ணு ரெண்டும் தூங்காது…

ஆண் : ஆடாத ஊஞ்சல்களை…
ஆடவைத்த வண்ண மயில்…
பாடாத சொந்தங்களை…
பாட வைத்த சின்ன குயில்…

ஆண் : எங்கிருக்கு என் உயிரே…
என்னைவிட்டு நீ தனியா…
வந்துவிடு கண் மணியே…
எனக்கும் இங்கு ஓர் துணையா…

ஆண் : கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…
கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…

—BGM—

ஆண் : கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…
கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…

ஆண் : ஆயிரம் பிச்சி பூவும்…
அரும்பரும்பா பூத்தாலும்…
வாசமுள்ள பிச்சி எனக்கு…
வாய்க்காது எக்காலும்…

ஆண் : கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…

—BGM—

ஆண் : தவமிருந்து பெற்ற கிளி…
தவிக்கவிட்டு போனது போல்…
துணையாக வந்த கிளி…
தனியாக போய்விடுமோ…

ஆண் : ஆடாத ஊஞ்சல்களை…
ஆடவைத்த வண்ண மயில்…
பாடாத சொந்தங்களை…
பாட வைத்த சின்ன குயில்…

ஆண் : என்னை விட்டு தன்னந்தனி…
வாழ்ந்திடுமோ வாழ்ந்திடுமோ…
என்னுயிரும் என்னைவிட்டு…
போய் விடுமோ போய் விடுமோ…

ஆண் : கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…
கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…

ஆண் : ஆயிரம் பிச்சி பூவும்…
அரும்பரும்பா பூத்தாலும்…
வாசமுள்ள பிச்சி எனக்கு…
வாய்க்காது எக்காலும்…

ஆண் : கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…

—BGM—

ஆண் : தவமா தவமிருந்து…
துணையாக வந்த கிளி…
தவியா தவிக்க விட்டு…
தனியாக சென்றது என்ன…

ஆண் : ஊராரின் கண்ணு பட…
ஊர்கோலம் போனதம்மா…
ஆரோட கண்ணு பட்டு…
ஆத்தோடு போனதம்மா…

ஆண் : கையிலதான் வச்சிருந்தா…
தவறி அது போகுமின்னு…
மடியில நான் வைச்சிருந்தேன்…
மடியுமின்னு நெனக்கலியே…

—BGM—

ஆண் : கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…
கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…

ஆண் : ஆயிரம் பிச்சி பூவும்…
அரும்பரும்பா பூத்தாலும்…
வாசமுள்ள பிச்சி எனக்கு…
வாய்க்காது எக்காலும்…

ஆண் : கண்ணே நவமணியே…
உன்னைக் காணாமல் கண் உறங்குமோ…


Notes : Kanne Navamaniye Song Lyrics in Tamil. This Song from En Bommukutty Ammavukku (1988). Song Lyrics penned by Ilayaraja. கண்ணே நவமணியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading