கன்னம் செவந்தது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & வாணி ஜெயராம்சந்திரபோஸ்ஊமைகுயில்

Kannam Sivanthathu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு…
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு…
கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு…
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு…

ஆண் : மோகம் அதிகம் உன் மேலே எனக்கு…
ஆசை இருக்கா என் மேலே உனக்கு…
தந்தானா ஒய் தந்தானா…
தந்தானா ஒய் தந்தானா…

பெண் : ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு…
அச்சம் கூட பாதி அதில் இருக்கு…
ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு…
அச்சம் கூட பாதி அதில் இருக்கு…

பெண் : பாழும் மனசு அடிக்கடி துடிக்கும்…
நீ பக்கம் வர துள்ளித் துள்ளி குதிக்கும்…
தந்தானா ஒய் தந்தானா…
தந்தானா ஆ தந்தானா…

—BGM—

ஆண் : ஆசை இருக்க அந்தரங்கம் எதுக்கு…
பாசம் இருக்க பள்ளியறை எதுக்கு…
பாவை நீயும் பக்கத்தில் இருக்க…
ஆசை தீரும் என்னை நீ அணைக்க…

பெண் : நாளை மறுநாள் கல்யாணம் நமக்கு…
தாலியேறும் உன்னாலே எனக்கு…
ஆசை தீரும் என்னாலே உனக்கு…
ஆசை அதை நீ இப்போ அடக்கு…
தந்தானா ஒய் தந்தானா…
ஆண் : தந்தானா ஒய் ஒய் தந்தானா…

—BGM—

ஆண் : பொண்ணா பொறந்தா தயக்கம்…
அது தானா தீரும் உனக்கும்…
ஆசை இருக்கு உனக்கும்…
உன்னப் பார்த்தா புரியுது எனக்கும்…

பெண் : இளம் வயது ஆசை எனக்கு…
ஏங்கித் தவிக்கும் தவிப்பும் இருக்கு…
காலம் வரும்வரை காத்திருப்பேன்…
தாலியேறும் வரை உனை தடுத்திருப்பேன்…
ஆஹ் தந்தானா ஒய் தந்தானா…
ஆண் : ஹேய் தந்தானா ஒய் ஒய் தந்தானா…

ஆண் : கன்னம் செவந்தது வெட்கத்தில் உனக்கு…
பார்க்கும் பார்வையும் தினுசா இருக்கு…

பெண் : ஆசை அதிகம் நெஞ்சுக்குள் இருக்கு…
அச்சம் கூட பாதி அதில் இருக்கு…

ஆண் : மோகம் அதிகம் உன் மேலே எனக்கு…
பெண் : ஆசை இருக்கா என் மேலே உனக்கு…
ஆண் : தந்தானா ஒய் தந்தானா…
பெண் : ஹான் தந்தானா ஆ தந்தானா…

ஆண் & பெண் : தந்தானா ஒய் தந்தானா…
தந்தானா ஆ தந்தானா…


Notes : Kannam Sivanthathu Song Lyrics in Tamil. This Song from Oomai Kuyil (1988). Song Lyrics penned by Vaali. கன்னம் செவந்தது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading