கண்ணான கண்ணே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்சீன் ரோல்டன் அனிருத் ரவிசந்தர்நானும் ரவுடிதான்

Kannaana Kanne Song Lyrics in Tamil


ஆண் : கண்ணான கண்ணே… ஏ…
நீ கலங்காதடி…
கண்ணான கண்ணே…
கண்ணான கண்ணே…
நீ கலங்காதடி…
நீ… கலங்காதடி…

ஆண் : யார் போனா…
யார் போனா… என்ன…
யார் போனா… யார் போனா…
யார் போனா… என்ன…
நான் இருப்பேனடி…
நீ கலங்காதடி…

BGM

ஆண் : ஒரு கணம் ஒரு போதும்…
பிரியகூடாதே…
என் உயிரே… என் உயிரே…
நீ அழுக கூடாதே…
நீ கண்ட கனவு எதுமே…
கலைய கூடாதே…
நான் இருக்கும் நாள் வரைக்கும்…
நீ அழுக கூடாதே…

ஆண் : கிடைச்சத இழக்குறதும்…
இழந்தது கிடைக்குறதும்…
அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி…

ஆண் : குடுத்தத எடுக்குறதும்…
வேற ஒன்ன குடுக்குறதும்…
நடந்தத மறக்குறதும்…
வழக்கம் தானடி…

ஆண் : கண்ணான கண்ணே…
நீ கலங்காதடி…
என் உயிரோட ஆதாரம்…
நீ தானடி…
கண்ணான கண்ணே….
நீ கலங்காதடி…
யார் போனா என்ன…
நான் இருப்பேனடி… ஓ… ஓ…

BGM

ஆண் : என் விரல் இடுக்குல…
உன் விரல் கெடக்கணும்…
நசுங்குற அளவுக்கு இறுக்கி…
நா புடிக்கணும்…
நான் கண்ண தொறக்கையில்…
உன் முகம் தெரியனும்…
உசுருள்ள வரைக்குமே…
உனக்கென்ன புடிக்கணும்…

ஆண் : கடல் அலை போல…
உன் கால் தொட்டு உரசி…
கடல் உள்ள போறவன் …
நான் இல்லடி…
கடல் மண்ண போல…
உன் காலோட ஒட்டி…
கரை தாண்டும்…
வரை நான் இருப்பேனடி…

ஆண் : கண்ணான கண்ணே…
நீ கலங்காதடி…
என் உயிரோட ஆதாரம்…
நீ தானடி…
கண்ணான கண்ணே…
நீ கலங்காதடி…
யார் போனா என்ன…
நான் இருப்பேனடி…

BGM

ஆண் : ஒரு கணம் ஒரு போதும்…
பிரியகூடாதே…
என் உயிரே… என் உயிரே…
நீ அழுக கூடாதே….
நீ கண்ட கனவு…
எதுமே கலைய கூடாதே…
நான் இருக்கும் நாள் வரைக்கும்…
நீ அழுக கூடாதே…

BGM

ஆண் : நித்தம் நித்தம்…
நீ ஒடஞ்சா ஒட்ட வைக்க…
நான் இருக்கேன்…
கிட்ட வச்சு பாத்துக்கவே…
உயிர் வாழுரேண்டி…
பெத்தவங்க போனா என்ன…
சத்தமில்லா உன் உலகில்…
நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான்…
உயிர் வாழுரேண்டி…


Notes : Kannaana Kanne Song Lyrics in Tamil. This Song from Naanum Rowdy Dhaan (2015). Song Lyrics penned by Vignesh Shivan. கண்ணான கண்ணே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top