அகலாதே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்பிரித்திவீ & யுவன் ஷங்கர் ராஜா யுவன் ஷங்கர் ராஜாநேர்கொண்ட பார்வை

Agalaathey Song Lyrics in Tamil


பெண் : நடை பாதை பூவனங்கள் பார்த்து…
நிகழ்கால கனவுகளில் பூத்து…
ஒரு மூச்சின் ஓசையிலே…
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்…
ஓஹோ… ஓஓஹோ…

பெண் : வா உள்ளங்கைகளை கோர்த்து…
கை ரேகை மொத்தமும் சேர்த்து…
சில தூர பயனங்களில்…
சிறகாய் சேர்ந்திருப்போம்…

ஆண் : அகலாதே… அகலாதே…
நொடி கூட நகராதே… ஏ… ஏ…
செல்லாதே… செல்லாதே…
கணம் தாண்டி போகாதே…

ஆண் : நகராமல் உன் முன் நின்றே…
பிடிவாதம் செய்ய வேண்டும்…
அசராமல் முத்தம் தந்தே…
அலங்காரம் செய்ய வேண்டும்…

BGM

ஆண் : நடை பாதை பூவனங்கள் பார்த்து…
நிகழ்கால கனவுகளில் பூத்து…
ஒரு மூச்சின் ஓசையிலே…
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்…

ஆண் : வா உள்ளங்கைகளை கோர்த்து…
கை ரேகை மொத்தமும் சேர்த்து…
சில தூர பயனங்களில்…
சிறகாய் சேர்ந்திருப்போம்…

BGM

ஆண் : நீ… எந்தன் வாழ்வில் மாறுதல்…
என் இதயம் கேட்ட ஆறுதல்…
மடி சாயும் மனைவியே…
பொய் கோபப் புதல்வியே…
நாடு வாழ்வில் வந்த உறவு நீ…
இதயத்தின் தலைவி நீ…
பேரன்பின் பிறவி நீ…

ஆண் : என் குறைகள் நூறை மறந்தவள்…
எனக்காக தன்னை துறந்தவள்…
மனசாலே என்னை மணந்தவள்…
அன்பாலே உயிரை அளந்தவள்…
உன் வருகை என் வரமாய் ஆனதே…

BGM

ஆண் & பெண் : நடை பாதை பூவனங்கள் பார்த்து…
நிகழ்கால கனவுகளில் பூத்து…
ஒரு மூச்சின் ஓசையிலே…
ஒன்றாய் வாழ்ந்திருப்போம்…
ஓஹோ… ஓஓஹோ…

ஆண் : ஒன்றாய் வாழ்ந்திருப்போம்…

ஆண் & பெண் : வா உள்ளங்கைகளை கோர்த்து…
கை ரேகை மொத்தமும் சேர்த்து…
சில தூர பயனங்களில்…
சிறகாய் சேர்ந்திருப்போம்…

ஆண் : சிறகாய் சேர்ந்திருப்போம்…

BGM


Notes : Agalaathey Song Lyrics in Tamil. This Song from Nerkonda Paarvai (2019). Song Lyrics penned by Pa.Vijay. அகலாதே பாடல் வரிகள்


Scroll to Top