கண்மூடி திறக்கும்போது

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்தேவி ஸ்ரீ பிரசாத் தேவி ஸ்ரீ பிரசாத்சச்சின்

Kanmoodi Thirakum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்மூடி திறக்கும் போது…
கடவுள் எதிரே வந்தது போல…
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…
குடை இல்லா நேரம் பார்த்து…
கொட்டி போகும் மழையை போல…
அழகாலே என்னை நனைத்து இதுதான் காதல் என்றாலே…

ஆண் : தெரு முனையை தாண்டும் வரையில்…
வெறும் நாள்தான் என்று இருந்தேன்…
தேவதையை பார்த்ததும் இன்று…
திருநாள் என்கின்றேன்…

ஆண் : அழகான விபத்தில் இன்று…
ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்…
தப்பிக்க வழிகள் இருந்தும்…
வேண்டாம் என்றேன்…

ஆண் : ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…

—BGM—

ஆண் : உன் பேரும் தெரியாது…
உன் ஊரும் தெரியாது…
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா…
நீ என்னை பார்க்காமல்…
நான் உன்னை பார்கின்றேன்…
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா…

ஆண் : உயிருக்குள் இன்னோர் உயிரை…
சுமக்கின்றேன் காதல் இதுவா…
இதயத்தில் மலையின் எடையை…
உணர்கின்றேன் காதல் இதுவா…

ஆண் : கண்மூடி திறக்கும் போது…
கடவுள் எதிரே வந்தது போல…
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…

—BGM—

ஆண் : வீதி உலா நீ வந்தால்…
தெருவிளக்கும் கண் அடிக்கும்…
வீடு செல்ல சூரியனும் அடம்புடிக்குமே…
நதியோடு நீ குளித்தால்…
மீனுக்கும் காய்ச்சல் வரும்…
உன்னை தொட்டு பார்க்கதான் மழை குதிக்குமே…

ஆண் : பூகம்பம் வந்தால் கூட… ஓஹோ…
பதறாத நெஞ்சம் எனது… ஓஹோ…
பூ ஒன்று மோதியதாலே… ஓஹோ…
பட் என்று சரிந்தது இன்று… ஓஓ…

ஆண் : கண்மூடி திறக்கும் போது…
கடவுள் எதிரே வந்தது போல…
அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே…
குடை இல்லா நேரம் பார்த்து…
கொட்டி போகும் மழையை போல…
அழகாலே என்னை நனைத்து இது தான் காதல் என்றாலே…

ஆண் : ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…
ஓஹோ… ஹோஹோ… ஓஹோ… ஓஓ…
ஓஹோ… ஓஓ… ஓஓ…


Notes : Kanmoodi Thirakum Song Lyrics in Tamil. This Song from Sachein (2005). Song Lyrics penned by Na. Muthu Kumar. கண்மூடி திறக்கும் போது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading